27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
10 1441880194 7howtomakeyourhairthicker
தலைமுடி சிகிச்சை

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!!!

முடி உதிர்வு, முடி உடைத்தல், வழுக்கை தலை, கூந்தல் அடர்த்தியாக இல்லை என கூந்தல் சார்ந்த பிரச்சனையே அதிகமாக இருக்கிறது. டிவியை திறந்தால் போதும் வீடு வாங்குங்க, தலை முடி உதிராம இருக்க என்ன பண்ணும். இந்த இரண்டும் தான் இன்றைய டிவியின் விளம்பர உயிர்நாடி.

ஆனால், கூந்தலை பொறுத்தவரை இது மற்ற வகையான உடல் நலத்தையும் கெடுக்கிறது. ஏனெனில், முடி கொட்ட ஆரம்பித்தால் பெண், ஆண் இருவருமே மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணாமாக அதிகரிக்கும் மன அழுத்தம் மற்ற வகை உடல் நலனையும் பாதிக்கிறது….

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்

உங்கள் கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்றில்லை. ஷாம்பூ, சோப்பு பயன்படுத்தி அடிக்கடி தலைக்கு குளிப்பது மயிர்க்கால்களின் வேர்களை வலுவிழக்க செய்கிறது. மற்றும் உங்கள் கூந்தலின் அடர்த்தியை குறைத்து மெல்லிசாக ஆக்கிவிடுகிறது.

ஷாம்பூ வேண்டாம

் பெரும்பாலான ஷாம்பூக்களில் பயன்படுத்தப்படும் டிடர்ஜெண்ட்கள் கூந்தலின் வலுவை பாதித்து, முடியை உடைய செய்கிறது. எனவே, நீங்கள் இயற்கை பொருள்களை பயன்படுத்தி தலைக்கு குளிப்பது தான் கூந்தலுக்கு நல்லது.

ஹீட்டர் தவிர்த்திடுங்கள்

கூந்தலை பராமரிக்க பலரும் இன்று ஹீட்டரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் உங்கள் கூந்தல் உடைவதற்கும், வலுவிழப்பதற்கும் நீங்கள் பயன்படுத்தும் ஹீட்டர் தான் காரணியாக இருக்கிறது. முடிந்த வரை உங்கள் கூந்தலை ஓர் துணியில் நன்கு துவட்டிவிட்டு தானாக காற்றில் காயவிடுங்கள்.

கூந்தல் சாயம் விட்டொழியுங்கள்

நரை முடியை மற்றவரிடம் இருந்து மறைக்கவும், இளசுகள் ஸ்டைல் என்ற பெயரில் பல வண்ணங்களில் சாயம் பயன்படுத்துவது கூந்தலின் நலனை தான் கெடுக்கிறது. இதற்கு காரணம் அந்த வண்ண பூச்சுகளில் இருக்கும் இரசாயனம் தான்.அப்படியும் நரை முடியை மறக்க வேண்டும் எனில், நீங்கள் தாராளமாக மருதாணியை பயன்படுத்தலாம்.

இறுக்கமான சீப்பு பயன்படுத்த வேண்டாம்

இறுக்கமான அல்லது அருகருகே பற்கள் கொண்ட சீப்பு பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் கூந்தலையும், முடிகளின் வேர்களையும் வலுவிழக்க செய்யும். முக்கியமாக கூந்தல் ஈரமாக இருக்கும் போது சீப்பு பயன்படுத்த வேண்டாம்.

மாஸ்க் பயன்படுத்துங்கள்

ஒன்றிரண்டு முட்டைகள் அதோடு கற்றாழை ஜெல் கொஞ்சம் சேர்த்து கலந்து தலையில் அப்பளை செய்து 10 -15 நிமிடங்கள் ஊறிய பின்பு சாதாரண நீரில் கழுவவும். இது கூந்தலின் வலிமையை அதிகரித்து அடர்த்தியாய் வளர உதவும்.

தலைக்கு எண்ணெய் வையுங்கள்

தினமும் தலைக்கு எண்ணெய் வையுங்கள். எண்ணெய் மசாஜ் செய்வதால் உங்கள் முடியின் வலிமை அதிகரிக்கும். முடியின் மயிர்க்கால்கள் வலுமையாகும். இதனால், முடி உதிர்தலை குறைக்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

மயிர்க்கால்களின் உறுதியை மேம்படுத்த புரதம், வைட்டமின் பி, சி, டி, ஈ, ஜின்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவை. கீரை, வால்நட்ஸ், பயிறு போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

மன அழுத்தம் வேண்டாம்

மன அழுத்தம் அதிகமான முடி உதிர்தலை ஏற்படுத்தும். இன்றைய ஐ.டி வாசிகளில் பெரும்பாலானோருக்கு முடி உதிர்வதற்கு மன அழுத்தம் தான் காரணம்.

மருந்து மாத்திரைகள்

உடல்நலனுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்து, மாத்திரைகள் கூட உங்களது கூந்தலில் ஏற்படும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைய செய்து முடியுன் வலிமையை கெடுக்கிறது.

10 1441880194 7howtomakeyourhairthicker

Related posts

பொடுகு என்றால் என்ன ? பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

nathan

தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுப் பிரச்சனை போயே போச்சு!

nathan

கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

nathan

இளமையிலேயே தலைமுடி நரைக்க முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

முடி 2 இன்ச் நீளமாக வளரச் செய்யும் சில்வர் ஃபாயில் மாஸ்க்!! ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan

கரிசலாங்கன்னியை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுவாதற்கு !

nathan

பெண்களே உங்க முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள்! சூப்பர் டிப்ஸ்

nathan

பேன் தொல்லைக்கு மின்னணு சீப்பு

nathan

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

nathan