28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

beautiful_face_முகத்தில் உள்ள வடு நீங்
முகப்பரு வடு, அம்மைத் தழும்பு வடு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவற்றிற்கு தொடக்கத்திலேயே சிகிச்சைக் கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனைக் குணப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம். ஆனால் வடுவினை நிரந்தரமாக நீங்கச் செய்ய ஒலிவ் எண்ணையை தினமும் இரவில் பூசி சூரிய வெளிச்சம் படும் முன் கழுவி வந்தால் வடுக்கள் விரைவிலேயே மறைந்தோடும்.

கரும்புள்ளிகள் மறைய
கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒவ்வாமையை கொணர்கிறது. அதுபோல எலுமிச்சைச் சாற்றையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

பருக்கள் வராமல் தடுக்க சில வழிகள்
பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல்,  மலச்சிக்கல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளைப் பொருத்த வரையில் தலையணை உறை, சோப், துவாய்  போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகையப் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

Related posts

மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! நீங்களே பாருங்க.!

nathan

இத செய்யுங்கள் போதும்..!!தொடை மற்றும் அக்குளில் அசிங்கமாக கறுப்பு அடையாளம் இருக்கா ?

nathan

கோடைகால சருமத்தை பாதுகாக்க ஆண்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் போதும்…!

nathan

கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!

nathan

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

nathan

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் கருமை நீங்கி முகம் பொலிவு பெற.

nathan

சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு..அழகு தரும் நலங்கு மாவு..

nathan

மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள் மற்றும் மேக்அப்

nathan