b527
Other News

விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..?

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து பிரபல மனநல மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெருபோன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார்.

 

அதுமட்டுமின்றி நடிகரும் கூட இவர் நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் என பல படங்களில் நடித்துள்ளார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மீரா கடந்த 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. அவரது உடல் ஓமந்துல்லா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

மீராவின் மரணத்தைத் தொடர்ந்து மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பிரபல மனநல மருத்துவர் ஒருவர் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

 

அப்போது விஜய் ஆண்டனியின் மகள் மரணத்திற்கான காரணம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது: பல பதின்ம வயதினருக்கு வீட்டில் தனி அறைகள் கொடுக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினருடன் பேச வாய்ப்பில்லை.

இது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பெற்றோருக்குத் தெரியப்படுத்துவது கடினமாகவும் மன அழுத்தமாகவும் இருக்கிறது என்று அவர் கூறினார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனி அறைகளில் விடக்கூடாது என்றும் அவர் கூறினார். இது விஜய் ஆண்டனி மகள் விஷயத்திலும் நடந்துள்ளது என்றார்.

Related posts

அமலாபால் கையில் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்கள்

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan

தனி ஒருவன் 2 அரவிந்த்சாமி கதாபாத்திரத்தின் வில்லனே ஒரு பிரபல ஹீரோ தான்

nathan

காதலர் தினத்தை கொண்டாடிய இந்திரஜா ரோபோ சங்கர்

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அமலா பால்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

nathan

ஐஸ்வர்யா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

nathan

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள்

nathan

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி – நடவடிக்கை

nathan

உலக அழகி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்கிறாரா?

nathan