குளிர்காலத்தில் சரும பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். குறிப்பாக பலர் வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க பலர் கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அந்த கிரீம்கள் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தருகின்றன. உங்கள் சருமத்தை பராமரிக்க உங்கள் வீட்டு சமையலறையில் தேனையும் பயன்படுத்தலாம்.
சருமத்தை ஈரப்பதமாக்குவதைத் தவிர, தேனில் பல நன்மைகள் உள்ளன. ஏனெனில் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை முகப்பரு மற்றும் பிற தோல் நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன. முக்கியமாக தேனை சருமத்தில் தடவினால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும். உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு தேன் ஒரு சிறந்த தோல் பராமரிப்புப் பொருளாகும். இப்போது குளிர்காலத்தில் தேனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
ஒரு கிண்ணத்தில் 2-3 தேக்கரண்டி பச்சை பால் மற்றும் சம அளவு தேன் கலக்கவும். பின்னர் அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். குளிர்காலத்தில் தினமும் செய்து வந்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.
#2 தயிர் மற்றும் தேன்
ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி தேன் வைக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசவும்.இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும். வறண்ட சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானது.
#3 தேன் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். அடுத்து, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
#4 கற்றாழை ஜெல், தேன், பட்டை தூள்
ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து, அதை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 15-20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.