25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
28 1453964963 7 honey
சரும பராமரிப்பு

சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுகப்பிரவத்தை விட, சிசேரியன் மூலம் தான் குழந்தை பிறக்கிறது. இப்படி சிசேரியன் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு வயிற்றில் தழும்புகள் மறையாமல் இருக்கும். சில நேரங்களில் அந்த தழும்புகள் கடுமையான அரிப்பை ஏற்படுத்தக்கூடும். சரி, உங்களுக்கு இந்த சிசேரியன் தழும்பை மறைக்க வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இங்கு சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் அந்த தழும்பை மறைக்கலாம். ஆனால் உங்களுக்கு சிசேரியன் செய்து சில நாட்களே இருந்தால், உடனே தழும்புகளை மறைக்கும் பணியில் ஈடுபடாதீர்கள்.

சிசேரியன் மூலம் ஏற்பட்ட காயங்கள் குணமாகும் வரை பொறுத்திருங்கள். மேலும் நீங்கள் சிசேரியன் தழும்புகளை மறைக்க எந்த ஒரு முறையை கையாள நினைத்தாலும், முதலில் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். சரி, இப்போது சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க உதவும் வழிகளைக் காண்போம்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் தினமும் 2-3 முறை தடவி வர, அதில் உள்ள குணப்படுத்தும் உட்பொருட்கள், அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்து தழும்பை மறையச் செய்யும்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே வைட்டமின் ஈ கேப்சூல்களை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வர, விரைவில் தழும்புகள் மறையும். Show Thumbnail

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, தழும்புகளை மறையச் செய்யும். எனவே எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பஞ்சில் நனைத்து, தழும்புள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, பின் எண்ணெய் தடவ வேண்டும். ஆனால் உங்களுக்கு அப்பகுதியில் ஏற்கனவே அரிப்பு இருந்தால், பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இது அரிப்பை இன்னும் அதிகமாக்கும்.

டீ பேக்

டீ போடப் பயன்படுத்திய டீ பேக்கை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இதனால் அதில் உள்ள காப்ஃபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்வதோடு, சருமத்தை பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ளும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், இது தழும்புகளை மறையச் செய்யும். அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி, அதனை தழும்பின் மேல் தேய்த்து விட வேண்டும். இப்படி தினமும் பலமுறை செய்து வர, விரைவில் அந்த தழும்பை மறையச் செய்யலாம்.

தக்காளி

பல காலமாக அனைத்து வித தழும்புகளையும் மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் தக்காளி. அத்தகைய தக்காளியை வெட்டி அதனை தழும்புள்ள இடத்தில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், தழும்புகள் விரைவில் மறையும்.

தேன்

சிசேரியன் தழும்புகளை மறைக்க உதவும் ஓர் சிறந்த பொருள் தேன். அந்த தேனை தினமும் 2-3 முறை சிசேரியன் தழும்புள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், சிசேரியன் தழும்புகளை விரைவில் மறைக்கலாம்.

28 1453964963 7 honey

Related posts

பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

அக்குள் கருமையைப் போக்க ப்ளீச்சிங்

nathan

சருமமே சகலமும்…!

nathan

தோல் சுருக்கத்தை போக்கும் உருளைக்கிழங்கு

nathan

கழுத்து கருமை நிறம் மறைய

nathan

சரும பிரச்சனைகளைத் தடுக்க வெந்தயத்தைப் பயன்படுத்துவது எப்படி?சூப்பரா பலன் தரும்!!

nathan

கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

nathan

உங்க சரும சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…!

nathan