உதடுகளுக்கு கூடுதல் அழகூட்ட நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை சரியாக உபயோகித்தால் முகத்தின் அழகினை லிப்ஸ்டிக் ஒன்று மட்டுமே அதிகப்படுத்திவிடும்.
ஆனால் அதையே கொஞ்சம் கிறுக்கிவிட்டால் போதும் மொத்த அழகையும் அது பறித்துவிடும்.
எனவே, லிப்ஸ்டிக் பற்றி சில குறிப்புகளை இங்கு உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
படித்து பிடித்திருந்தால் கடைபிடியுங்கள்.
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளின் மீது பவுடர் போட்டு பின்னர் லிப்ஸ்டிக்கை போடவும்.
லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற வகையில் பார்த்து வாங்குங்கள்.
விலை மலிவானவைகளை வாங்கவே வாங்காதீர்கள். அவைகள் உங்கள் வாய்க்குள் சென்று பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
சிலருக்கு கூடுதல் வண்ணம் பிடிக்கும், அவர்களுக்குப் பிரச்சினையில்லை. தற்போது அடர்த்தியான வண்ண லிப்ஸ்டிக்குகள் வந்துவிட்டன.
ஆனால் மெல்லிய நிறத்தைப் பயன்படுத்துபவர்கள் லிப்ஸ்டிக்கைப் போட்ட பின் லிப் கிளாஸ் பயன்படுத்தினால் எடுப்பாக இருக்கும்.
லிப்ஸ்டிக்கை போடுவதற்கு முன்னர் அதே நிறத்திலான லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு உங்கள் உதடுகளுக்கு அவுட்லைன் கொடுத்துவிட்டு பின்னர் அந்த கோடுகளுக்குள் லிப்ஸ்டிக் போடுங்கள்.
பின்னர் மீண்டும் லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு அவுட் லைனை அடர்த்தியாக்குங்கள்.
பொதுவாக லிப்ஸ்டிக்கை விட லிப்ஸ்டிக் லைனர் சற்று கூடுதல் வண்ணத்துடன் இருக்குமாறு பிரயோகிக்கவும்.
லிப்ஸ்டிக் போடுவதற்கு அதற்குரிய பிரஷ் பயன்படுத்தவும். போட்ட பின்னர் டிஷ்யூ காகிதம் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் திரித்திரியாக இருக்கும் லிப்ஸ்டிக்குகள் சரியாகிவிடும்.
கருஞ்சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் பொதுவாக எல்லோருக்கும் ஒத்துப்போகும்.
பழைய உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்த வேண்டாம். நமது உதடுகளில் நிற மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.