‘இரவில் முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது… சருமம் சுவாசிக்க ஏதுவாக அதை சுத்தமாக விட வேண்டும்’ என்கிறார்கள். இன்னொரு பக்கமோ, ‘30 பிளஸ்சில் அடியெடுத்து வைக்கும் போதே பெண்கள் நைட் க்ரீம் உபயோகிக்க வேண்டும்’ என்கிறார்கள். இதில் எது சரி?
அழகுக்கலை நிபுணர் ஷிபானி இளமையான சருமத்தில்
இயற்கையான எண்ணெய் சுரப்பு இருக்கும். அதுவே சருமத்தை பாதுகாக்கும். இவர்கள் சருமத்தை சுத்தப்படுத்திவிட்டு அப்படியே தூங்கச்செல்லலாம். 30 வயதுக்கு மேல் அந்த சுரப்பு குறைய ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போகும். நம் சருமத்தில் பி.ஹெச். பேலன்ஸ் என ஒன்று உண்டு. அது 5.6ல் தக்கவைக்கப்பட வேண்டும். இளவயதினருக்கு அது 5.6க்கு மேல் இருக்கலாம். இந்த அளவு குறையும்போது சருமம் வறளத்தொடங்கும். எனவேதான், இதை ஈடுகட்ட நைட் க்ரீம் உபயோகிக்க சொல்கிறோம். யாருக்கு எந்தவித நைட் க்ரீம் பொருத்தமானது என்பதை சரும நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.