26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
CL F
அசைவ வகைகள்

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

தேவையான பொருட்கள்:
ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் – அரைக்கிலோ
சிக்கன் 65 பவுடர் – ஒன்னரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – பாதி
முட்டை – 1
கார்ன்ஃப்லோர் – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
ரெட் கலர் – பின்ச்
எண்ணெய் உப்பு – தேவைக்கு.
CL F
1
விங்ஸ் -சை லாலிபாப்பாக கட் செய்வது சிறிது சிரமமான காரியம், என்றாலும் அதன் ருசிக்கும் அழகிற்காகவும் மெனக்கிடலாம்.அரைக்கிலோவில் 10-12 எண்ணம் இருக்கும் விங்சை இரண்டாக கட் செய்து கொள்ளவும்.தோலை நீக்கி கொள்ளவும்.மேல் பக்கம் கட் செய்த துண்டில் ஒரு பக்கம் ஒரு எலும்பு இருக்கும். எலும்பை பிடித்துக் கொண்டு கறிப்பகுதியை மேல் பக்கமாக ஒதுக்கினால் லாலி பாப் ரெடியாகிவிடும் அதைப்போல் விளிம்புப்பகுதி கட் செய்ததில் இரண்டு எலும்பு இருக்கும்,அதனில் மெல்லிய எலும்பை நீக்கி விட்டு கன்மான எலும்பில் கறிப்பகுதியை ஒதுக்கி வைத்தால் இன்னொரு லாலிபாப் ரெடியாகிவிடும்.ஆக ஒரு விங்ஸில் இரண்டு லாலிபாப் கிடைக்கும்.
கழுவி சுத்தமாக தண்ணீர் வடித்து வைக்கவும்.
2
லாலிபாப்புடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சிக்கன் 65 மசாலா, எலுமிச்சை ஜூஸ்,தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
3
ஒரு மணி நேரம் ஊறட்டும்.
4
ஒரு பவுலில் முட்டை,கார்ன்ஃப்லோர்,கடலைமாவு,சிறிது உப்பு,பின்ச் ரெட் கலர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
5

6
சிக்கன் லாலிபாப்பை அதனில் கால் மணி நேரம் ஊற விடவும்.சிக்கன் துண்டின் மேல் கரைசலை தோய்த்து எடுத்து பொரிக்கவும்.
7
எண்ணெய் காய வைக்கவும். மிதமான சூட்டில் கருகாமல் பக்குவமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.போன்பகுதியில் அலுமினியம் ஃபாயில் கொண்டு கவர் செய்தால் பார்க்க அழகாக இருக்கும்.
8
இதனை ஸ்டார்டராக பரிமாறலாம் அல்லது சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
CL F
குறிப்பு:
இது கொஞ்சம் சாஃப்டாக இருக்கும்.இதே முறையில் செய்து பாருங்க,டேஸ்ட் அருமையாக இருக்கும்.கிரிஸ்பாக வேண்டுமெனில் சிறிது அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம்.அல்லது முட்டையுடன் கடலை மாவு பதில் மைதாமாவு கூட சேர்த்து செய்யலாம்.

Related posts

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

nathan

இலகுவான மீன் குழம்பு

nathan

காலிஃபிளவர் முட்டை பொரியல்

nathan

சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan