29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
எம்ப்ராய்டரிதையல்

குறுக்குத் தையல்

ld146தேவையானப் பொருட்கள்
அய்டா ஃபேப்ரிக்(aida fabric) – 3″ X 3″ அளவானது
சிறிய ஃபிரேம் – 1
ஊசி
எம்பிராய்டரி நூல்கள் – டார்க் பிங்க், லைட் பிங்க், டார்க் பச்சை, லைட் பச்சை, இலை பச்சை
இதற்கு தனி குறுக்குத் தையல் (Single Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும்.


இதற்கு வரி குறுக்குத் தையல் (A row of cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் அடுத்த கட்டத்தில் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும். இப்படியே தேவையான வரை தொடர்ந்து பின்னர் அதே முறையில் பின்னோக்கி வரவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொடரவும்.

இதற்கு அரை குறுக்குத் தையல் (Half Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். அவ்வளவுதான். இதையே மேலிருந்து ஆரம்பித்து கீழ்நோக்கி கொண்டு வரலாம்.

இதற்கு கால் குறுக்குத் தையல் (Quarter Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி சதுரத்தின் மையம் (C) வரை செல்லவேண்டும். அதாவது பாதி தூரம் (எண் 2) வரை சென்றால் போதும்.

இதற்கு முக்கால் குறுக்குத் தையல் (Three-quarters Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் ஏதேனும் ஒரு கீழ் பக்கத்தில் (எண் 1) இருந்து தொடங்கி, குறுக்கே மேல்நோக்கி எண் 2 வரை செல்லவும். அதன்பின்னர் பின்புறமாக, நேரே கீழாக எடுத்து வந்து, எண் 3 வழியே வெளிக்கொணரவும். அதில் இருந்து குறுக்கே சதுரத்தின் மையம் வரை செல்லவும்.

தையலுக்கு BASEஆக பிளாஸ்டிக் பாட் (Palstic Pad), அய்டா ஃபேப்ரிக்(Aida Fabric), லினன் ஃபேப்ரிக் (Linan Fabric) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரிய படங்கள் செய்து ஃபிரேம் செய்வதாயின் அய்டா ஃபேப்ரிக்தான் மிகவும் வசதியானது. இதில் தைப்பதும் மிக இலகு. முதன் முதலில் தைக்கத் தொடங்குபவர்கள் இதில் ஆரம்பிப்பது நல்லது. இந்த பேப்ரிக்கிலும் 11Count, 14 Count, 16 Count, 18 Count, 22 Count என வகைகள் உண்டு. Count என்பது ஒரு அங்குலத்தில் எத்தனை குறுக்கு நூல்கள் ஓடுகின்றன என்பதைக் குறிக்கும்.

தைப்பதற்கு எம்பிரொய்டரி நூல்(Embroidery floss), வூல் நூல்(Wool thread), யார்ன் (yarn) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தையலை தைப்பதற்கென்றே முனை மழுங்கிய, நீண்ட கண்(துளை) உள்ள ஊசிகள் (tapestry needle) இருக்கின்றன.

முதலில் மாதிரிக்கு தையல் (கார்னேஷன் பூ) விளக்கப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு துணியில் மார்க் செய்துவிட்டு அதன் மீதும் தைக்கலாம் அல்லது தையலை எண்ணி அதற்கேற்றவாறு தைக்கலாம்.

முதலில் பூ இதழ்களை குறுக்குத் தையலால் தைக்கவும். தைப்பதற்கு இரட்டை நூலைப் பயன்படுத்தவும்.

தைத்துக்கொண்டிருக்கும் போது இடையில் நூல் முடிந்துவிட்டால் முடிச்சு போட வேண்டாம். பதிலாக பின்னால் திருப்பி, ஏற்கனவே தைத்த தையலினூடாக கோர்த்து எடுத்து விடவும்.

பூவை முழுவதும் தைத்து சிறிய ஃபிரேமில் போட்டு பிளைன்ட் (Blind)கயிறில் கட்டிவிட்டால் பார்ப்பதற்கு கைப்பிடி போல மிகவும் அழகாக இருக்கும். இதே பூவை லேடீஸ் பான்ட் பாக்கட்டில், தலைகாணி உறையில் அல்லது சிறுவர்களின் ஆடைகளிலும் போடலாம். மிகவும் அழகாக இருக்கும்.

குறுக்குத் தையலின் வகைகளையும், எப்படி செய்வது என்பதையும் திருமதி. நர்மதா அவர்கள் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கின்றார். அறுசுவை நேயர்களுக்கு மிகவும் அறிமுகமான திருமதி. நர்மதா அவர்கள் சமையல் மட்டுமன்றி, கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகுந்த திறன் வாய்ந்தவர்.

Related posts

ழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

nathan

ஆரி ஒர்க்

nathan

பேட்ச் ஒர்க் குஷன் கவர்

nathan

சூப்பர் லெக்கிங்ஸ்

nathan

சுடிதார் தைக்கும் முறை

nathan

எம்ப்ராய்டரி

nathan

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை இங்கே தரப்பட்டுள்ளது.

nathan

டி-ஷர்ட் பெய்ன்டிங்

nathan

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan