தேவையான பொருட்கள் :
தோசை மாவு – தேவையான அளவு
கொத்துக்கறி – கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
முட்டை – ஒன்று
கொத்தமல்லித் தழை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
கறியை அலசி பிழிந்து தண்ணீர் இல்லாமல் வடித்து இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்த்து வதக்கவும்.
கறி வதங்கியதும் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கி மூடி போட்டு வேக விடவும்.
நன்கு வெந்ததும் கரம் மசாலாத் தூள், கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். முட்டையை அடித்து அதில் கறி மசாலாவை கலந்து கொள்ளவும்.
தோசைகல்லில் எண்ணெய் தடவி தோசை மாவை ஊத்தாப்பமாக கனமாக ஊற்றவும்.
ஊத்தாப்பத்தின் மேல் கறி கலவையை முழுவதும் பரவினாற் போல் வைக்கவும்.
மேலே எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு சிறிது நேரத்தில் எடுத்து விடவும்.
சுவையான கறி தோசை தயார்.