25.5 C
Chennai
Saturday, Jan 18, 2025
E 1393303619
உதடு பராமரிப்பு

அழகான உதடுகளுக்கு…!

முக அழகை முழுமையாக வெளிப் படுத்துவதில், கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம், 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. ஆனால், உதடுகளில் உள்ள சருமம் உதிர, மாதக் கணக்காகும். சரியான பராமரிப்பு இல்லாததால் தான், உதடுகள் தோல் உரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன.

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்:

* தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் பூசி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும்.

* வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், மென்மையாகும்.

* உதடுகளை கடிக்கும் பழக்கத்தினாலும், தரமில்லாத, “லிப்ஸ்டிக்’ உபயோகிப்பதாலும், உதடுகள் வறண்டும், நிறம் மாறியும் விடும்.

* மற்றவர் உபயோகித்த, “லிப்ஸ்டிக்’களை உபயோகிப்பதாலும், “லிப்ஸ்டிக்’ போட உபயோகிக்கும், “பிரஷ்’ஷை சுத்தப்படுத்தாமல், மறுபடி உபயோகிக்கும் போதும், தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. தற்போது, “மேட் பினிஷ் லிப்ஸ்டிக்’குகள் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே, அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.

* இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் உள்ள, “லிப்ஸ்டிக்கை’ சுத்தமாக அகற்றி விட வேண்டும்.

* லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே பூசக் கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே, “லிப் பிரஷ்’ஷின் உதவியாலேயே, “லிப்ஸ்டிக்’ போட வேண்டும்.

* தினமும் நெய் அல்லது வெண்ணெய் உதடுகளில் பூசி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

* முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையை சேர்த்து உதடுகளில் பூசி வர, வறண்ட உதடுகள் அழகாகும்.

* இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன், இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் பூசி வந்தால், அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் பூசி வந்தால், அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும். உதடுகளில் தடவிய, “லிப்ஸ்டிக்’கை நீக்க, “பேஸ் வாஷ்’ அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், உதடு களில், “ஐஸ்’ கட்டிகளை ஒற்றி எடுத்தால், “லிப்ஸ்டிக்’ நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

* உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு, “வைட்டமின் பி’ குறைபாடு உள்ளவர்களுக்கு, உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்து கொண்டால் சரியாகி விடும்.

உதடுகளுக்கு மேக் அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
* முதலில் பவுண்டேஷன் பூசிய பின், “லிப்ஸ்டிக்’ போட்டால், நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

* லிப்ஸ்டிக் உபயோகிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், “லிப் சால்வ்’ உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

* லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக, “லிப் கிளாஸ்’ பூசி கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான், “லிப் கிளாஸ்’ போட வேண்டும்.

* “லிப் பேஸ் பூசி, அதன் மேல், “லிப்ஸ்டிக்’ பூசினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் போடும்போது, “லிப்ஸ்டிக்’ நிறத்திற்கு ஏற்றதாக, “லிப் லைனரின்’ நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு, “லிப்ஸ்டிக்’ வாங்கும் போதும், அதற்கேற்ற, “லிப் லைனர்’ வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ் டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.

* சிவப்பு நிறத்தைச் சார்ந்த, லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப் லைனரும், “பிரவுன்’ நிறத்தைச் சார்ந்த, “லிப்ஸ்டிக்’குகளுக்கு, “பிரவுன் லிப்லைனரும் உபயோ கிக்கலாம். தேவைப்பட்டால், லிப் லைனரை கூட, “லிப்ஸ்டிக்’காக பயன்படுத்தலாம்.

* மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை, “லிப்ஸ்டிக்’காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு, “கிரீம்’ தடவ வேண் டும். இது உதடுகள் காய்ந்து, வெடிக்காமல் இருக்க உதவும்.
E 1393303619

Related posts

கருப்பான உதடுகள், சிவப்பாக மாற்ற ஈஸியான குறிப்புகள் !!

nathan

உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்கு இயற்கை வைத்தியம்

nathan

கவர்ச்சியான உதடுகளை பெற!

nathan

லிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ்

nathan

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?

nathan

குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸ் உபயோகிக்கலாம்.

nathan

உதட்டுக்கு லிப்‌ஸ்டிக்!!

nathan

லிப்ஸ்டிக் காதலிகளே… ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு லிப்ஸ்டிக் சாப்பிடுகிறீர்கள் தெரியுமா?

nathan

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை!

nathan