32.5 C
Chennai
Tuesday, Jul 15, 2025
rasi
Other News

இந்த ராசிக்காரங்க பன்முகத் திறமைசாலிகளாக இருப்பாங்களாம்…சிறந்தவர்களாக இருப்பார்கள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கலை ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள். ஓவியம் வரைவதிலும், பாடுவதிலும், இசைக்கருவி வாசிப்பதிலும் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், மற்றவர்களை பேசி மயக்குவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் இவர்கள் எழுதுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டானவர்கள் மட்டுமல்ல, கன்னி ராசிக்காரர்கள் அவர்களிடம் பல திறமைகளையும் கொண்டுள்ளனர். மற்றவர்கள் அதிகம் விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்கும் துறைகளில் இவர்கள் நிபுணராக விரும்புவார்கள். இந்த குணம் ஆரம்பத்திலிருந்தே அவர்களிடம் உள்ளது. கூடுதலாக, அவர்கள் புதிய விஷயங்களை விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருக்க இவர்கள் விரும்புவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பல துறைகளில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று நினைப்பார்கள். அதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் செய்வார்கள். இவர்கள் சிறப்பாக பாடுவார்கள், நடிப்பார்கள் மற்றும் கதை சொல்வார்கள். இவர்கள் நம்பிக்கையுடனும், வேடிக்கையாகவும், தங்கள் பார்வையாளர்களை வேடிக்கையாக வைத்திருக்க முடியும். இவர்களின் இந்த குணத்தாலேயே இவர்களிடம் பழக விரும்புவார்கள்.

கும்பம்

 

புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் விஷயங்களைச் செய்வதில் கும்ப ராசிக்காரர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் யோசனைகள் எப்போதும் ஒரிஜினலாதாகவும், மற்றவர்களின் சிந்தனைகளில் இருந்து வித்தியாசமானதாகவும் இருக்கும். இவர்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் புரட்சிகர யோசனைகளால் நிரப்பப்பட்டுள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு இவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள்.

மீனம்

 

மீனத்தில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் தேவைப்படும் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும், இசைக்கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்கள். அவர்கள் கலை, கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள். புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் மீன ராசிகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

Related posts

டொனால்டு டிரம்புக்கு விஷம் அனுப்பிய கனேடிய பெண்

nathan

பருப்பு வகைகளை ஊறவைத்து தான் சமைக்க வேண்டும்!தெரிஞ்சிக்கங்க…

nathan

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..சிறுவயது புகைப்படம்

nathan

மகனுடன் முதல் தீபாவளியை கொண்டாடிய மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா

nathan

ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

nathan

ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன விவசாயி!‘தங்கமாக’ மாறிய தக்காளி

nathan

ஐஷுவின் ஆடையை பிடித்து நிக்ஷன் செய்த செயல்… இது பெண்களைப் பாதுகாப்பதற்காகவா?

nathan

இதை நீங்களே பாருங்க.! மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை சூடாக்கிய ஆண்ட்ரியா !!

nathan

மோசமான உடையில் சின்னத்திரை நமீதா

nathan