தேவையானவை:
பொடியாக நறுக்கிய பேரீச்சை – 1 கப் (200 கிராம்)
பால் – 1 கப்
சர்க்கரை – அரை கப்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஆப்ப சோடா – முக்கால் டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
மைதா – 1 கப்
பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
அலுமினியம் ஃபாயில் – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பேரீச்சை, பால், சர்க்கரை, வெண்ணெய், ஆப்ப சோடா சேர்த்து சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும். கலவை லேசாகப் பொங்கிவரும்போது அடுப்பை அணைத்து கலவையை மத்தால் மசிக்கவும். மிக்ஸியில் அரைக்கக் கூடாது. இந்தக் கலவையில் மைதா, பேக்கிங் பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை வெண்ணெய் தடவிய புடிங் மோல்டில் ஊற்றி அலுமினியம் ஃபாயிலால் மோல்டை மூடவும். எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பேனில் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு குக் மோடில் வைத்து தண்ணீரைக் கொதிக்கவிடவும். பிறகு திறந்து பார்த்து தண்ணீர் கொதித்ததும், உள்ளே புடிங் மோல்டை வைத்து மூடி, குக் மோடில் வேக விடவும். கலவை வெந்து குக்கர் கீப் வார்ம் மோடுக்கு வந்ததும் (ஒரு மணி நேரம் ஆகும்) வெளியே எடுத்து ஐஸ்க்ரீம் உடன் பரிமாறவும்.