தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – 1/2 கப்
* பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* கொதிக்க வைத்த பால் – 1 கப்
* தண்ணீர் – 1 1/2 கப்
* வெல்லம் – ஒரு கப் (பொடியாக தட்டியது)
* தண்ணீர் – 1/2 கப் (வெல்லத்தை பாகுவாக்க)
* நெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – சிறிது
* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாசிப்பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
* பின் அதில் பச்சரிசியை சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வறுத்து, இறக்கிக் கொள்ளவும். பின்பு அதை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, கழுவிய அரிசியுடன் பால் மற்றும் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி மற்றும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் அதில் கொதிக்க வைத்துள்ள பால் அல்லது நீரை வேண்டுமானால் சிறிது ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, நீரை ஊற்றி, பாகு தயாரித்துக் கொள்ளவும்.
* பின் அந்த பாகுவை குக்கரில் உள்ள அரிசியில் வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைக்கவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், இந்நிலையில் சூடான பால் அல்லது நீரை ஊற்றி, அடிபிடிக்காமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இல்லாமல், ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போதே, அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிவிடுங்கள்.
* இப்போது ஒரு சிறிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு வறுத்து, பொங்கலுடன் சேர்த்து , அதன் மேல் சிறிது ஏலக்காய் பவுடர், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்.