தற்போது பெரும்பாலோரின் சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான தட்பவெப்பநிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்துவிடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வெளிப்படுகின்றன.
தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். பால் சரும செல்களைப் புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். எனவே, இவை இரண்டையும் கலந்து சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் சரும வறட்சியைத் தடுப்பதுடன் சருமத்தின் நிறமும் கூடும்.
3 டேபிள் ஸ்பூன் கற்றாழைச் சோற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்கு கிளறிச் சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியைத் தடுக்கலாம். வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச் சாறு, சிறிது தேன் சேர்த்துக் கலந்து தடவிவந்தால் சருமம் புதுப்பொலிவுடன் வறட்சியின்றி இருக்கும்.
நெல்லிக்காயை அரைத்துப் பொடி செய்து, அதில் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்துக்குத் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால், உடனே முகம் பொலிவாகக் காணப்படுவதுடன் சரும செல்களும் புத்துணர்ச்சி பெறும்