frank3
சரும பராமரிப்பு

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

எப்போதும் டூ-வீலரில் பறக்கும் அவசரப் பறவையா நீங்கள் இந்த வெயில், உங்களின் மென்மையான முகம், கை, பாதம் போன்ற பகுதிகளை பதம் பார்த்துவிடுமே. என்ன செய்யப் போகிறீர்கள்? இதோ, உங்கள் சருமப் பாதுகாப்புக்கு ஒரு விசேஷ குளியல் பவுடர்.

எலுமிச்சை தோல்-50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
கசகசா- 50 கிராம்,
பயத்தம் பருப்பு- கால் கிலோ.

இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் தேய்த்துக் குளித்து வாருங்கள். `வெயில் அடிச்சா எனக்கென்ன’ என்று உங்கள் சருமம் கொக்கரிக்கும். கூடவே, புதிய பொலிவோடு மினுமினுக்கும்.

டூ வீலரில் போனால் மட்டுமா? ரோட்டில் நடந்தாலே தூசு படிந்து தோல் மங்கலாகிவிடுகிறது. `எவ்வளவு அழகா இருந்த நான் இப்படி அழுக்கா ஆயிட்டேன்’ என்று கண்ணாடியை பார்த்து மனம் வெம்புபவர்களுக்கு, எலுமிச்சை தரும் பளிச் `பேக்’ இது.

கடலை மாவு- 6 டீஸ்பூன்,
முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்.

இவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். பிறகு, முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்’கை போட்டுப் பாருங்கள். சருமத்தை சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவை விரைவிலேயே மீட்டுத் தரும்.
frank3

Related posts

சரும பாதுகாப்பு டிப்ஸ்

nathan

ஆரோக்கியமான சருமத்தை பெற – Leaves that gives healthy skin

nathan

சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும்.

nathan

பெண்களே நகத்தை அழகாக வெச்சிக்க ஆசையா?…

nathan

கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம்

nathan

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு!

nathan

பட்டுப்போன்ற மென்மையான சருமத்தைப் பெற உதவும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகள்!

nathan