garlic 13 1497338084
Other News

ருசியான பூண்டு சிக்கன் ரைஸ்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – ¼ கப் (நறுக்கப்பட்டது)
ரெட் பெல் மிளகு – ½ கப் (நறுக்கப்பட்டது)
பூண்டு பற்கள் – 4 (அரைக்கப்பட்டது)
அரிசி – ½ கப் (சமைக்கப்படாதது)
வெஜிடபிள் ஆயில் (காய்கறி எண்ணெய்) – 2 டீ ஸ்பூன்
லெமன் ஜூஸ் – ¼ கப்
கோழியின் நெஞ்சுப்பகுதி – 1 (போன்லெஸ் மற்றும் துண்டுகளாக வெட்டியது)
இஞ்சி – 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
சோயா சாஸ் – 2 டீ ஸ்பூன்
தேன் – 1 டீ ஸ்பூன்
கோழி குழம்பு – ½ கப்
ப்ரெஸ் கொத்துமல்லி – 1 டீ ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

1. ஒரு பௌலை எடுத்துகொண்டு அதில் சிக்கன், வெங்காயம், பூண்டு, இஞ்சி, எண்ணெய், உப்பு, மற்றும் லெமன் ஜூஸ் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக ஊறவைத்து, ஓரமாக வைத்துவிட வேண்டும். (30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்).
2. அதன் பின்னர், ஆழமான அடிப்பாகமுடைய குக்கரை எடுத்துகொண்டு அதில் அரிசியை சேர்க்க வேண்டும். அந்த அரிசி மென்மையாகும் வரை சமைக்க வேண்டும். பின் ஊற வைத்த சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

3. அதன்பிறகு, ரெட் பெல் மிளகையும், சோயா சாஸையும் சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ள வேண்டும். மேலும், கோழி குழம்பை அத்துடன் சேர்த்து, 5 லிருந்து 8 நிமிடங்கள் வரை அதனை மூடி வைக்க வேண்டும். (நன்றாக வேக வைப்பதற்காக)
4. கடாயை சோதித்து பார்த்து, அரிசி நன்றாக வேகவைக்கப்பட்டிருக்கிறதா? சிக்கன் மிருதுவாக இருக்கிறதா? என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதன்பின்னர், தேனையும், நறுக்கப்பட்ட கொத்துமல்லியையும் சேர்த்துகொள்ள வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய பூண்டு சிக்கன் ரைஸ் தயாராகி, சூடாக பரிமாறவும் உங்களை குதூகலத்துடன் வரவேற்கிறது.

 

Related posts

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..!“உங்க வீட்டு புள்ளையா நெனச்சி என்ன மன்னிச்சுடுங்க..

nathan

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

nathan

ரூ. 250 கோடி வசூலித்த விடாமுயற்சி: இது தாங்க அஜித் பவர்

nathan

இரண்டாம் திருமணத்தை முடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை

nathan

வாகன விபத்தில் பிரபல நடிகர் காலமானார்

nathan

சந்திரயான்-3 வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு -பெரிய அறிவியல் சாதனை

nathan

பிக் பாஸ் 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

வயநாட்டில் கலெக்டராகிய முதல் ஆதிவாசி பெண்!

nathan

இந்த 5 ராசி குழந்தைகள் தங்களின் சிறுவயதிலேயே பெரிய உயரத்தை அடைவார்களாம்

nathan