28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
f40698d4 2a27 4edf 85bb ada9673da1cc S secvpf
பொதுவானகைவினை

நவீன மங்கையர் விரும்பும் மெட்டல் ஜூவல்லரி

மெட்டல் நகைகள் பல்வேறு டிசைன்களில் மங்கையர் விரும்பும் வடிவில் உலா வருகின்றன. தினம் அணிய ஏற்ற வகையில் பல புதிய வடிவமைப்பு மற்றும் பலதரப்பட்ட உலோகங்களான இந்த மெட்டல் ஜூவல்லரி நவீனயுவதிகள் விரும்பி அணிகின்றனர். ஸ்டைல் மற்றும் உறுதியான நகை என்பதில் தனித்து விளங்குகிறது மெட்டல் ஜூவல்லரி.

பாரம்பரிய மற்றும் நவீன மெட்டல் ஜூவல்லரிகள் :

பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் நவீனவடிவமைப்பில் மெட்டல் நகைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் வடிவமைப்பு மற்றும் தரத்தை வைத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நவீன மங்கையர்கள் அணியும் ஆடை வடிவமைப்பு ஏற்றவாறு வண்ணம் மற்றும் கூடுதல் பொலிவான மெட்டல் நகைகள் கிடைக்கின்றன.

மெட்டல் நகைகள் பிராஸ், செம்பு, வெள்ளி, ஆக்ஸிடைசடு மெட்டல் போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது. நீடித்த வழுவழுப்பான மென்மையான தோற்றம், குறைவான விலை என்றவாறு மெட்டல் நகைகள் கிடைக்கின்றன. காதணி மற்றும் நெக்லஸ் இணைந்த செட் நகைகள், தனிப்பட்ட பிரிவில் நகைகள் என்றவாறு கிடைக்கின்றன. இந்திய பாரம்பரிய கலைநயத்துடன் கைவினைஞர்களின் சீரிய கைவண்ணத்தில் உருவாகும் மெட்டல் நகைகள் இன்றைய நாளில் மிக அதிகமாக விற்பனையாகின்றன.

மெட்டல் காதணிகள் :

மெட்டல் காதணிகள் எனும்பபோது அன்றாடம் மாற்றி மாற்றி அணியும் வகையில் நொக்கி வைத்த காதணிகள் வருகின்றன. இவற்றுள் பிளாக், வெள்ளை மெட்டல் காதணிகளில் சிறு வண்ண மணிகள் தொங்குவது போன்றும், கற்கள் போன்று வண்ண எனாமல் பூசப்பட்டும் கிடைக்கின்றன. கண்டலரி, இலைவடிவம், ஜிமிக்கி, வட்ட வடிவம் போன்ற காதணிகள் கிடைக்கின்றன. சில மாடல் காதணி தங்கத்தில் ஜொலிக்கும் வகையில் உள்ளன.

காதணி நெக்லஸ் செட் நகைகள் :

கழுத்தில் இறுக்கி பிடிக்கக்கூடிய நெக்லஸ் மற்றும் ஆரம் போன்ற மாலை அமைப்பில் மெட்டல் நெக்லஸ் கிடைக்கின்றன. அத்துடன் அதற்கேற்ற இணை காதணியும் கிடைக்கின்றன. பிரமிப்பூட்டும் மெட்டல் மணிகள் மற்றும் வண்ணமணிகள் இணைந்து நடுவில் கண்ணாடி அல்லது பதக்கம் வைத்து மெட்டல் நெக்லஸ் பிரமாதப்படுத்துகின்றன. வண்ண நூல் கயிற்றின் நடுவில் மெட்டல் மணிகள் கோர்த்த மாலை அமைப்பிலும் கிடைக்கின்றன.

மெட்டல் வளையல்கள் :

மெட்டல் அன்றாடம் அணியக்கூடிய வளையல்கள் விதவிதமாய் வருகின்றன. இதுவும் பிளாக் மெட்டல், எல்லோ மெட்டல், ஒயிட் மெட்டல் என்றவாறு பலவித கற்கள் மற்றும் எனமாமல் செய்யப்பட்ட வளையல்கள் கிடைக்கின்றன.

மெட்டல் நகைகளை பாதுகாக்கம் விதம் :

தினமும் அணிந்து செல்லக்கூடிய மெட்டல் நகைகள் என்றும் பளபளப்பாக இருக்க வேண்டுமானால் தினம் கழற்றியவுடன் மெல்லிய துணியால் துடைத்து வைக்க வேண்டும். மாதம் ஒருமுறை டூத் பிரஸ் மூலம் நகை கழுவும் திரவம் கொண்டு கழுவ வேண்டும். மேலும் வேறு விதமான மெட்டல்களை சேர்த்து வைக்கக்கூடாது. நவீன யுவதிகள் அன்றாடம் அணியும் வகைகள் ஏராளமான டிசைன் மற்றும் மாடல்களில் மெட்டல் நகைகள் கிடைக்கின்றன. அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மெட்டல் நகைகள் கூடுதல் கவனத்துடன் உருவாக்கப்படுகின்றன.

f40698d4 2a27 4edf 85bb ada9673da1cc S secvpf

Related posts

காகிதத்தில் கலை வண்ணம் கண்டார்!

nathan

அழகிய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங் (stained glass painting)

nathan

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

nathan

குட்டீஸ் சாண்டா செய்வோமா………….

nathan

ஒயர் கலைப்பொருட்கள்

nathan

ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம்

nathan

பீட்ஸ் வேலைப்பாடு

nathan

சில்வர் வால் ஹேங்கிங்

nathan

தேன் மெழுகு மலர்க் கொடி

nathan