ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்ததுதான் பச்சி ஜூவல்லரி. இந்த வேலைப்பாடு மிகவும் நுணுக்கமான அழகிய வடிவமைப்பு கொண்டதுதான். பழம் பெறும் கலையான இந்த பச்சி கரிகாரி வேலைப்பாடு முப்பரிமாண வடிவமைப்பை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி கற்கள், வண்ண பச்சி இலைகள் மற்றும் முத்துக்களை கொண்டு இந்த நகைகள் செய்யப்படுகின்றன.
தங்கத்தகடுகளை வளைத்து நடுவில் மரகதம், கொம்பு போன்ற பட்டை தீட்டாத கற்களை பதித்து இலைகள் செய்யப்படுகின்றன. இந்த இலைகள் ஓர் அடுக்கு ஈர் அடுக்க என்று பல அடுக்குகளாக இணைக்கப்பட்டு முப்பரிமானத்தில் திகழ்கிறது. இந்த வேலைப்பாடு கொண்ட நகைகள் முழுக்க முழுக்க கைகளால் செய்யபடுவதாகும்.
அழகாக செய்யப்படும் இந்த வேலைப்பாட்டை கொண்ட பதக்கங்களை முத்துக்கள், வண்ண கண்ணாடி கற்கள் அல்லது தங்கச் சரடுகளில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம். பச்சி வேலைப்பாடுகளை கம்மல், வளையல், நெக்லஸ், பென்டன்ட் என்று பல நகைகளில் காண முடிகிறது. பராம்பரிய நகை வேலைப்பாடான இதை தற்காலத்திய நவீன டிசைன்களில் புகுத்தி ஃப்யூஷன் நகைகளும் செய்யப்படுகின்றன. இந்த வேலைப்பாட்டை கொண்ட கங்கன் மிகவும் அழகாக இருக்கிறது.
சிறுசிறு இலைகள் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி உருட்டையாக செய்யப்படும் இந்த கங்கன், கெம்பு, பச்சை கல் மற்றும் முத்துக்கள் இணைந்து மிக நேர்த்தியாக கிடைக்கிறது, வித்தியாசமான நகைகளை அணிய விருப்பம் கொண்ட பெண்கள் பச்சி வேலைப்பாடு நகைகளை நிச்சயம் விரும்புவர்.