வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்திலும் நன்றாக தடவி மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் பொடுகுகள் போகும்.
• வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து முகத்துக்கு தடவி 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்.
• வெந்தயத்தை அரைத்து அதனோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும்.
• வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை முகத்தைக் கழுவுவதற்கு இந்த நீரை உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையும் பொன் வண்ணத்தையும் பெறலாம்.
• வெந்தயம் இளநரையையும் போக்ககூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி தேங்காய் எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளிக்க வேண்டும்.