பெண்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட நெயில் பாலிஷைப் பயன்படுத்துவதோடு, நெயில் பாலிஷ் போடும் முன்னும், பின்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் இருக்கின்றனர். நகங்களை அழகுப்படுத்தப் பயன்படுத்தும் நெயில் பாலிஷை நகங்களுக்குப் போடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
நெயில் பாலிஷ் போடுபவர்களுக்காக ஒருசில முக்கியமான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. இந்த டிப்ஸ்களை மனதில் கொண்டு நெயில் பாலிஷ் போட்டால், நகங்கள் நன்கு ஆரோக்கியமாகவும், அழகாவும் இருக்கும். நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடும் முன், நிறமற்ற பேஸ் போடுவது மிகவும் முக்கியம். எப்போது நெயில் பாலிஷ் போடும் முன்னும், அதனை நன்கு குலுக்கிவிட்டு சிலர் போடுவார்கள். ஆனால் அப்படி செய்தால், நெயில் பாலிஷில் முட்டைகள் சேர்ந்துவிடும்.
அதற்கு பதிலாக அதனை இரண்டு உள்ளங்கைக்கு நடுவே வைத்து உருட்ட வேண்டும். நெயில் பாலிஷ் வகைகளிலேயே மிகவும் மோசமானது என்றால் அது ‘குவிக் ட்ரை’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது தான். இந்த வகையான நெயில் பாலிஷ் விலை அதிகமானது மட்டுமல்லாமல், நகங்களை வறட்சியடையச் செய்து, விரைவில் முறியச் செய்யும். நெயில் பாலிஷ் போடும் முன்னும் சரி, பின்னும் சரி, நகங்களை எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் க்யூட்டிகிள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, நெயில் பாலிஷ் உரியாமலும் நீண்ட நாட்கள் இருக்கும். நெயில் பாலிஷ் போட்ட பின்னர், அது விரைவில் உலர வேண்டுமானால், குளிர்ச்சியான ஓடும் நீரில் காண்பிக்க வேண்டும். நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்று, நெயில் பாலிஷை மிகவும் அடத்தியாகப் போடக்கூடாது.
இதனால் நகங்களானது நாளடைவில் உரிய ஆரம்பிக்கும். நெயில் பாலிஷ் போட்ட பின்னர், நகங்களை சுடுநீரில் அலசக் கூடாது. இதனால் நெயில் பாலிஷில் உள்ள கெமிக்கலால் நகங்களில் வெடிப்புகள் வரும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.