27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
1454932581 4917
முகப் பராமரிப்பு

முகப்பொலிவுப் பெற இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள்

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

1454932581 4917

Related posts

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்!

nathan

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!!!

nathan

நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

nathan

கருவளையத்தை போக்கும் தேன்

nathan

அடர்த்தியான புருவத்திற்கு இயற்கை வழிமுறைகள்

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

nathan

வீட்டில் செய்யக்கூடிய டான் சருமத்திற்கான‌ 2 எளிய ஃபேஸ் பேக்

nathan

சிவப்பழகை பெற

nathan