23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 04 15150
ராசி பலன்

உன் பிறந்த மாதத்தைச் சொல்லுங்க… அதிர்ஷ்டத்தைத் தரும் கற்கள் என்னவென்று சொல்கிறேன்…

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ரத்தினக் கற்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. குறிப்பாக அதில் கற்களின் நிறங்கள் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தபட்ட கற்களின் பெயர்களைத் தான் இப்போதும் பயன்படுத்துகிறோமா என்றால் நிச்சயம் இல்லை. உதாரணமாக, மாணிக்கத்திற்கும், கார்னெட்டுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்று தான். இதுப்போன்று கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்களுக்கான பெயர்கள் இன்று மாறுபட்டுள்ளன. அதில் சபையர் கல்லை நமக்கு லேபிஸ் என்ற பெயரில் தெரியும். வைரம் என்று நாம் அறியும் கல்லானது வெள்ளை சபையர் அல்லது வெள்ளை புஷ்பராகம் ஆகும்.

ஒருவர் தங்கள் பிறந்த மாதத்திற்கு ஏற்ற பிறப்பு கல்லை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும் என்று கருதப்படுகிறது. ஜோதிடர்களும், நீண்ட காலத்திற்கு முன் சில ரத்தின கற்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதாக சுட்டிக் காட்டினர். இப்போது ஒவ்வொரு மாதத்திற்கான பிறப்பு கல் என்னவென்பதையும், அதற்கான அர்த்தத்தையும் காண்போம்.

ஜனவரி

ஜனவரி மாதத்திற்கான பிறப்புக் கல் கார்னெட். இதை பயணத்தின் போது அணிந்திருப்பவரை பாதுகாப்பாக வைத்திருப்பதாக கருதப்படுகிறது. கார்னெட் என்ற வார்த்தையானது “விதை” என்று பொருள்படும் ஒரு வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. ஏனெனில் இந்த கல் ஒரு மாதுளை விதையின் நிறம் மற்றும் வடிவத்தை ஒத்திருக்கிறது.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்திற்கான பிறப்புக் கல் அமேதிஸ்ட். இது இக்கல்லை அணிந்திருப்பவரின் உறவுகளை வலுப்படுத்துவதாகவும், தைரியத்தை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த கல்லை அரச குடும்பத்தினர் மட்டுமே அணிய முடியும். மேலும் அமேதிஸ்ட் கல் போதைக்கு எதிராக பாதுகாப்பதாக பண்டைய கிரேக்கர்கள் நினைத்தனர். உண்மையில், அமேதிஸ்ட் கிரேக்க வார்த்தையில் இருந்தது வந்தது மற்றும் இதற்கு நிதானம் என்பது பொருள்

மார்ச்

மார்ச் மாதத்திற்கான பிறப்புக் கல் அக்வாமரைன். இது இதயம், கல்லீரல் மற்றும் வயிற்று நோய்களைக் குணப்படுத்துவதாக கருதப்பட்டது. அதற்கு இந்த கல்லை நீரில் ஊற வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும். ஆரம்பகால மாலுமிகள் அக்வாமரைன் தாயத்துக்கள், கடல் கடவுளான நெப்டியூனின் உருவத்துடன் பொறிக்கப்பட்டு, கடல் ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாப்பதாக நம்பினர்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்துக்கான பிறப்புக் கல் வைரம். இது அன்பின் அடையாளமாக இருப்பதைத் தவிர, அணிபவருக்கு தைரியத்தைக் கொண்டு வரும் என்று கருதப்பட்டது. சமஸ்கிருதத்தில், வைரமானது வஜ்ரா என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதற்கு மின்னல் என்று பொருள்; இந்து புராணங்களில், வஜ்ரா என்பது கடவுளின் அரசனான இந்திரனின் ஆயுதம்.

மே

மே மாதத்துக்கான பிறப்புக் கல் மரகதம்/எமரால்டு. இது கிளியோபட்ராவின் மிகவும் விருப்பமான கற்களில் ஒன்றாகும். மேலும் இது நீண்ட காலமாக கருவுறுதல், மறுபிறப்பு மற்றும் அன்புடன் தொடர்புடையது. பண்டைய ரோமதனியர்கள் இந்த கல்லை காதல் மற்றும் அழகின் தெய்வமான வீனஸுக்கு அர்ப்பணித்தனர். இன்று, மரகதங்கள் ஞானம், வளர்ச்சி மற்றும் பொறுமை ஆகியவற்றைக் குறிப்பதாக கருதப்படுகிறது.

ஜூன்

ஜூன் மாதத்துக்கான பிறப்புக் கல் முத்து. இது நீண்ட காலமாக தூய்மையின் அடையாளமாக இருந்து வருகிறது. பண்டைய கிரேக்கர்கள் முத்துக்கள் அன்பின் தெய்வமான அப்ரோடைட்டின் ஆனந்த கண்ணீர் என்று நம்பினர்.

ஜூலை

ஜூலை மாதத்துக்கான பிறப்புக் கல் ரூபி. இது பண்டைய இந்துக்களால் ரத்தினங்களின் ராஜா என்று கருதப்பட்டது. இந்த கல்லை அணிந்திருப்பவர் தீமையில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது. அடர் சிவப்பு நிறம் கொண்ட இந்த ரூபி கல் அன்பையும், ஆர்வத்தையும் குறிக்கிறது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்துக்கான பிறப்புக் கல் பெரிடோட். இது வலிமையைக் குறிக்கிறது. இது சில நேரங்களில் வெளிரிய பச்சை நிறத்தில் இருப்பதால், மாலை மரகதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லை தங்கத்துடன் சேர்ந்து அணியும் போது, இந்த கல் அணிந்தவரின் மோசமான கனவுகளில் இருந்து பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்துக்கான பிறப்புக் கல் சபையர். இது தீமை மற்றும் விஷங்களில் இருந்து பாதுகாப்பதாக கருதப்பட்டது. சபையர் கல்லால் ஆன பாத்திரத்திரத்தில் விஷப் பாம்பை வைத்தால் அது இறந்துவிடும் என்று நம்பப்பட்டது. பாரம்பரியமாக பாதிரியர்கள் மற்றும் மன்னர்களின் விருப்பமான கல் சபையர். இந்த கல் தூய்மை மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.

அக்டோபர்

அக்டோபர் மாதத்துக்கான பிறப்புக் கல் ஓப்பல். இது விசுவாசத்தையும், தன்னம்பிக்கையும் குறிக்கிறது. இந்த ஓப்பல் என்ற வார்த்தை லத்தீன் ஓபலஸிலிருந்து வந்தது. இதற்கு “விலைமதிப்பற்ற நகை” என்று பொருள். அக்காலத்தில் ஓப்பல் உள்ள ஆபரணங்கள் தீமைகளைத் தடுக்கவும், கண் பார்வையைப் பாதுகாக்கவும் அணியப்பட்டது.

நவம்பர்

நவம்பர் மாதத்துக்கான பிறப்புக் கல் புஷ்பராகம். இது அன்பு மற்றும் பாசத்தைக் குறிக்கிறது. இதை அணிந்தால், அது அணிபவருக்கு அதிக வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

டிசம்பர்

டிசம்பர் மாதத்துக்கான பிறப்புக்கல் டர்க்கைஸ். இது ஒரு காதல் கவர்ச்சியாக கருதப்படுகிறது. மேலும் இது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் அடையாளமாகும் மற்றும் இதை அணிந்தால், அது மனதை நிதானப்படுத்தி, அணிந்திருப்பவரை தீங்கில் இருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இந்த கல் உள்ள மோதிரங்கள், தீய சக்திகளைத் தடுக்கும் என்று கருதப்படுகிறது.

Related posts

இந்த 5 ராசிக்காரங்க மோசமான தீய குணம் கொண்டவர்களாம்…

nathan

சனி பெயர்ச்சி பலன் 2024: 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்

nathan

தெற்கு பார்த்த வீடு நல்லதா?

nathan

ஆயில்யம் நட்சத்திர பெண் மாமியாருக்கு ஆகாதா?

nathan

சனி பெயர்ச்சி: அடுத்த 25 மாதங்கள் இந்த ராசிகளுக்கு வெற்றி

nathan

இந்த ராசிகாரங்களுக்கு பொய் சொல்லவே வராதாம்..நேர்மையான ராசிக்காரர்

nathan

ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் ?

nathan

பெண்களுக்கு இடது கை துடித்தால் என்ன பலன்

nathan

ஜோதிடத்தின் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் எந்த வயதில் பிரகாசிக்கும் தெரியுமா?

nathan