27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
ld1440
முகப் பராமரிப்பு

புருவ முடி வளர்ச்சிக்கு

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெய்யும், ஆலிவ் எண்ணெய்யும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் உள்பட ஏதேனும் ஒரு எண்ணையை கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும். எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விடவேண்டும்.

எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்ய புருவங்கள் அழகாக உதவும். புருவங்களை எப்போதும் திரெட்டிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடது தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக்கூடும்.

பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிக மிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னா பின்னாவென வளரும். புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது அழகாக, இயற்கையாக இருக்கும்.
ld1440

Related posts

உங்க சமையலறையில் உள்ள ‘இந்த’ பொருட்கள் உங்கள ஹீரோயின் மாதிரி ஆக்குமாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்

nathan

பெரிய மூக்கை சிறியதாக மாற்ற வேண்டுமா? உங்களுக்கான இயற்கை சிகிச்சை இங்கே!

nathan

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan

எப்பவும் அழகா இருக்க

nathan

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..!

nathan

பெண்களே உங்க முகத்தில் அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

nathan