தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் – 1
வேக வைத்த சாதம் – 1 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவைக்கு
செய்முறை :
• நார்த்தங்காயில் இருந்து சாறு பிழிந்து அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்..
• வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
• வேக வைத்த சாதத்தில் நார்த்தங்காய் சாறு மற்றும் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.
குறிப்பு :
சிலருக்கும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் உணவு எதிர்த்து மேல் நோக்கி வருவது போலவும், வாந்தி வருவது போலவும் தோன்றும். வயிற்று வலியும் வரும். இவைகளால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை தயார் செய்து உண்ண வேண்டும். இது மதிய உணவிற்கு ஏற்றது.