29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
52662 kanavu nij
அழகு குறிப்புகள்

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

பலருக்கும் கனவுகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் தோன்றும். அந்த கனவு எதனால் வருகிறது என்பதையே அறிய முடியாது. இதில் சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும்.

அந்த வகையில், இறந்தவர்கள் கனவில் வருவது. அதன்படி கனவில் இறந்தவர்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தால் பல நல்ல மற்றும் அசுப அறிகுறிகளை அளிக்கிறது.

இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.

இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.

இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.

இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள். நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.

இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள். கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது ஒரு பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.

நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.

இறந்து போனவர்களை யாராக இருந்தாலும் தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு. இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.

உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள். நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.

குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள். இளம் மனைவி இறப்பதுபோல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.

இறந்த உறவினர்கள் பசியுடன் காணப்பட்டால், உடனடியாக ஏழைகளுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை வழங்குங்கள்.

இறந்தவர் கனவில் மிக உயர்ந்த மற்றும் ஆழமான குரலில் உங்களது பெயர் சொல்லி அழைப்பது நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்தும்.

Related posts

அழகா இருக்கணுமா? பெண்கள் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இதோ…

nathan

இது என்ன புதுசா இருக்கே ? சேலை கட்டினால் ஜாக்கெட் போட தேவையில்லையாம்..

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க பப்பாளி வைத்தியம்!…

sangika

அடேங்கப்பா! பாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி..

nathan

வெளிவந்த தகவல் ! சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

sangika

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan