25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
வாழ்க்கையை மாற்றும் தேங்காய் எண்ணெயின் பயன்கள்!!!
சரும பராமரிப்பு

வாழ்க்கையை மாற்றும் தேங்காய் எண்ணெயின் பயன்கள்!!!

தற்பொழுது உள்ள நறுமணமிக்க குளியல் பொருட்களின் மூலபொருட்களில், தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிப்பதை நாம் பார்க்கின்றோம். இப்போது அங்காடியில் உள்ள பொருட்களில் இதுதான் தனித்தன்மை கொண்டுள்ளது, காரணம் இதன் நறுமணம் மட்டுமல்ல அது பல பலன்களை அளிக்கிறது. தேங்காய் எண்ணெய் அழகு சார்ந்தது மட்டுமல்ல மருத்துவரீதியாகவும் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறது. வறண்ட சருமத்தினால் வரும் தொற்றுக்களை குணப்படுத்த பெருமளவு உதவுகிறது.

எனவே தூய்மைப்படுத்தாத மற்றும் சுத்தமான வகையை பயன்படுத்துவது நல்லது. தூய்மை செய்யவில்லை என்பது நிறம் நீக்குதல் அல்லது உள்ளிருக்கும் கிருமியை அழிப்பதற்காக ஏதும் வேதியியல் முறையை செய்யாமல் இருப்பது. தூய்மைப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெயில் நல்ல மணம் இருந்தாலும், அதில் எந்தவித மாறுப்பட்ட கொழுப்பும் இல்லை. தூய்மைப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை தேர்ந்தெடுக்கும் போது அதை வேதியல் செய்முறைக்கு உட்படுத்தியும், சில நேரங்களில் ஹைட்ரஜன் ஏற்றியும் இருப்பார்கள்.

இயற்கை தேங்காய் எண்ணெயைவிட தூய்மைப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயில் இருந்து உடலுக்கு கிடைக்கும் நலன்கள் குறைவாகவே உள்ளது. தேங்காயின் மூலம் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களை இங்கே பார்ப்போம்.

தோல் உரிதல்

தேங்காய் எண்ணெயை வைத்து தோல் உரிதலுக்கு நாமாகவே மருத்து செய்யலாம் உங்களுக்கு தெரியுமா? அதற்கு ஒரு பௌலில் இரண்டு மேஜைக்கரண்டி சீனியுடன் மூன்று மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். ஒரு ஜாடியில் போட்டு வைத்து விட்டால், தோலை வறட்சியடையச் செய்து, தோல் உரிதலை கட்டுப்படுத்தும் விலையில்லாத மருந்தை நாமாகவே செய்யலாம். அதுமட்டுமல்லாது தொடுவதற்கு உங்கள் மேனி மிகவும் மென்மையாகவும், நல்ல நறுமணமாகவும் இருக்கும்.

மேக்கப் ரிமூவர்

மேக்கப்பை நீக்குவது வலியானது, அதிலும் நீர்க்காப்பு கொண்ட மேக்கப்பாக இருந்தால் அசைவது கடினம். ஆனாடல் தேங்காய் எண்ணெய் இது போன்ற அலங்காரங்களை முகத்திலிருந்து எளிதாக நீக்கிவிடும். கூடுதல் ஊக்கமாக இது உணர்ச்சியுள்ள முகதோலுக்கு மென்மையையும், தோலின் நீர்த்தன்மையைக் கூட்டுகிறது.

மேக்கப் பிரஷ் சுத்திகரிப்பான்

தேங்காய் எண்ணெயின் மூலம் மேக்கப் பிரஷ்ஷில் படிந்துள்ளவற்றை எப்படி நீக்குவது என்பது குறித்து நீங்கள் கேட்கலாம்? கண்டிப்பாக அது செய்யும்! ஒரு மாதத்தில் மேக்கப் பிரஷ்ஷை பல தடவை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விரைவாக அதில் கிருமிகள் தொற்று ஏற்பட்டு பிரஷ்ஷில் முறிவு ஏற்படும். தேங்காய் எண்ணெயுடன் கிருமிகளுக்கு எதிரான சோப்பு சேர்த்து உங்கள் மேக்கப் பிரஷ்ஷில் உள்ள கிருமிகள் அனைத்தையும் அழித்து விடலாம். அதற்கு மேக்கக் பிரஷ்ஷை சில நேரம் தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துவிட்டு, பின் சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு நன்றாக அலச வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் காய வைக்க வேண்டும், அப்படி செய்வதால் நன்றாக இருக்கும்.

மாய்ஸ்சுரைசர்

சில நேரம் தேங்காய் எண்ணெய் முழு மேனியின் மாய்ஸ்சுரைசராக பயன்படும். இது லோஷனை விட பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தினமும் குளித்து முடித்த பின் எண்ணெயை உடல் முழுவதும் தடவுங்கள், அல்லது தொல்லை உள்ள இடத்தில் தடவுங்கள். உடனடியாகவே உங்கள் மேனி மிருதுவாகவும், வழுவழுப்பாகவும், ஒளி வீசவும் காண்பீர்கள்.

வாசனை திரவியம்

மக்களை அக்குளுக்குள் தேங்காய் எண்ணெயை தடவ சொல்லவில்லை. திறமையானவர்கள் எண்ணெயுடன் சில பொருட்களை சேர்த்து வாசனை திரவியமாக பயன்படுத்துவர். வெண்ணெய், கூழாங்கிழங்கு, ஆப்ப சோடா உப்பு, தேங்காய் எண்ணெய் அனைத்தையும் கலந்தால் 100% இயற்கையான வாசனை திரவியம் கிடைக்கும்.

கால் மற்றும் கை பாதுகாப்பு

தினமும் தேங்காய் எண்ணையை சருமத்தில் தடுவுவதால் நகங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் ஆகிறது. வறண்ட, பாத வெடிப்புக்கு தினமும் படுக்க போகும் முன் தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், உங்கள் கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து பார்க்க அழகாக இருக்கும்.

உதடு பாதுகாப்பு

தேங்காய் எண்ணெய் உதடுகளில் ஈரப்பதமூட்டுகிறது. இதனால் முத்தமிடுவர்களுக்கு நன்மையை அளிக்கிறது.

குளிர்புண் தீர்வு

வறண்ட மற்றும் வெடித்த உதடுகளை காட்டிலும் மோசமான ஒன்று உள்ளது என்றால் அது தான் குளிர்புண். இந்த போரில் கலந்து கொள்ள இதோ தேங்காய் எண்ணெய் உள்ளது. இயற்கையான ஈரப்பதத்தைத் தந்து, தொற்றுலிருந்து காக்கிறது. இதோடு மட்டுமல்லாது, உங்களின் உணர்ச்சியான உதடுகளை மென்மையாக்கவும் செய்யும்.

வேனிற்கட்டியில் இருந்து பாதுகாப்பு

வெப்பமான கோடை காலத்தில் அழையாமல் வருவது வேனிற்கட்டி. இதோ அதிர்ஷ்டவசமாக தேங்காய் எண்ணெய் மறுபடியும் நம்மை காக்க வந்துவிட்டது. அதிக நேரம் சூரிய கதிரின் தாக்கத்தால் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.

கூந்தலுக்கு ஈரப்பசையை சேர்க்கிறது

குளிர்காலத்தில் உள்ள கடுமையான குளிரால் கூந்தல் கடினமாகிறது. தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வு, பொடுகு, வலுவற்ற கூந்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. அதற்கு காரணம் மேல்கூறியது போல் அதில் உள்ள லாரிக் அமிலம் தான். இதயத்திற்கு மட்டும் அல்லாது, கூந்தலில் உள்ள புரதத்திற்கும் இது பெரும் தொடர்புடையது. கூந்தலிலுள்ள காய்ந்த இழைகளை மிருதுவாக்குகிறது. குளிப்பதற்கு 30-40 நிமிடங்களுக்கு முன் முடி முதல் வேர் வரை சமமாக தடவ வேண்டும். இதனால் கூந்தல் பார்ப்பதற்கே மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு மட்டுமல்லாது கூந்தல் உதிர்வும் குறையும்.

ஓட்டுமொத்த சருமப் பாதுகாப்பு

தலையை சுற்றி உடல் முழுக்க எண்ணெயை தேய்ப்பது பலருக்கு கடினமான ஒரு வேலையாக இருக்கலாம். ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் ஆகும். நல்ல ஈரப்பதம் கொண்ட சருமம், குறித்த காலத்திற்கு முன் வரும் வயதான தோற்றத்தை எதிர்கிறது. இதோடு மட்டுமல்ல தேங்காய் எண்ணெய் கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தவும் உதவுகிறது. எண்ணெயால் சருமம் வறண்டு போகாமலும், அதிக அளவு எண்ணெய் சுரந்து சருமத் துளைகளில் தங்காமலும் பார்த்துக் கொள்ளும்.

தொற்றுக்களை தடுத்து வைத்தியம் செய்யும்

தேங்காய் எண்ணெய் திறந்த புண்களில் தொற்றுக்களைக் குறைக்கும். சளிக் காய்ச்சல், தட்டம்மை, அக்கி மற்றும் அனைத்து வித கிருமிகளின் தாக்குதலில் இருந்து தேங்காய் எண்ணெய் நம்மை போரிட்டுக் காக்கும். பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் பல நோய்களுக்கு தேங்காய் எண்ணெயைத் தான் தீர்வாக உபயோகிக்கின்றனர்.

இதய கோளாறை கட்டுப்படுத்தும்

தேங்காய் எண்ணெயில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான 50% உலோரிக் அமிலம் உள்ளது. உலோரிக் அமிலம் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆகியவை வராமல் பாதுகாக்கும்.

செரிமானத்திற்கு உதவுகிறது

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம், முக்கியமாக இடைநிலைசங்கிலி கொழுப்பமிலம் (mcfa) செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த அமிலத்தை உடல் விரைவாக ஈர்த்து, செரிமானத்திற்கு குறைந்த அழுத்தத்தையும், வேலையையும் அளிக்கிறது. இதனால், உங்களுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும். அதோடு தேங்காய் எண்ணெயால் ஆற்றல் முறிவு ஏற்பட்டு உடல் எடை குறைகிறது. எப்படிப் பார்த்தாலும் வெற்றி தான்!

04 1433399115 14 digest

Related posts

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

sangika

சருமம் பற்றிய குறிப்புகள்..

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan

Beauty tips.. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க செய்யவேண்டியவை….!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?

nathan

பால் போன்ற நிறம் கொண்ட சருமம் வேண்டுமா?

nathan

வெயிலில் இருந்து பாதுகாத்துக்கௌ்ள சன் ஸ்க்ரீன் லோஷன்னை எப்படி நீங்களே வீட்டிலேயே தயாரிக்கலாம் ?

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan