23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
30e3791b eaff 4740 8c6a 8138a74d5206 S secvpf1
சைவம்

மணத்தக்காளி விதை காரக்குழம்பு

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி விதை – 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சத்தூள் – சிறிது
உப்பு- தேவையான அளவு,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
தேங்காய் – 2 சில்லு
வேர்க்கடலை – கொஞ்சம்
கடுகு – சிறிது
உப்பு – சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* மணத்தக்காளி விதையை வாணலில் எண்ணெய் ஊத்தி வறுத்து எடுத்து வைக்கவும்.

* புளியை ஊற வைக்கவும், தேங்காய், வேர்க்கடலையை அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின் பூண்டு போட்டு வதக்கவும்.

* பூண்டு வாசனை போனதும், வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நல்லா வதங்கினதும் மிளகாய் தூள், மஞ்சப்பொடி சேர்த்து சிறிது வதக்கிய பின் சிறிது தண்ணி, உப்பு சேர்த்து கொதிக்க விடுங்க.

* மிளகாய் தூள் வாசனை போனதும் ஊறவச்சிருக்கும் புளியை கரைச்சு சேர்க்கவும்.

* குழம்பு நல்லா கொதிச்சு புளி வாசனை போனதும் அரைச்சு வச்சிருக்கும், தேங்காய், முந்திரி, வேர்க்கடலை விழுதை போட்டு லேசா கொதிக்க விடவும். கொழம்பு கொதிச்சதும் வறுத்து வச்சிருக்கும் மணத்தக்காளி விதையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான மணத்தக்காளி கீரை விதை காரக்குழம்பு ரெடி.

30e3791b eaff 4740 8c6a 8138a74d5206 S secvpf

Related posts

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு…!

nathan

சௌ சௌ ரெய்தா

nathan

பேபிகார்ன் கிரிஸ்பி ஃப்ரை

nathan

சுவையான திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு

nathan

இஞ்சி குழம்பு

nathan

சிம்பிளான… தக்காளி சாம்பார்

nathan

காய்கறி கதம்ப சாதம்

nathan

கொண்டக்கடலை தீயல்

nathan