26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
9ef74206 1410 47c3 9270 3a2c37112804 S secvpf1
முகப் பராமரிப்பு

முகத்திற்கு ஃபேஷியல் ஏன் அவசியம்?

முகத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான சிகிச்சை ஃபேஷியல். சருமத்தின் செல்கள் எப்போதும் வளர்ந்துகொண்டே இருப்பவை. அதைத்தான் நாம் ஏஜிங்… அதாவது, வயதாவது என்கிறோம். செல்கள் வளரும் போது இறந்த செல்கள் மேலே தள்ளப்படும். எனவே, சருமத்தின் வெளிப்புற லேயர் முழுவதும் இறந்த செல்கள் நிரம்பியிருக்கும்.

அது சேரச் சேர, சருமத்தின் ஈரப்பதம் குறைந்து, சொரசொரப்பாக, பளபளப்பின்றி ஆரோக்கியமற்ற தோற்றம் தெரியும். எல்லோருக்கும் தனது சருமம் இளமையாக, வழவழப்பாக, கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு முதலில் இறந்த செல்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கு உதவுவதுதான் ஃபேஷியல். இளம் வயதில் சருமத்தின் செல் வளர்ச்சி சீராக இருக்கும். எனவேதான் மிகவும் இளம் வயதில் ஃபேஷியல் தேவையில்லை என்கிறோம்.

அதுவே 25 வயதுக்குப் பிறகு இறந்த செல்கள் வெளித்தள்ளப்படுவது வேகமாகவும் நடக்கும். புது செல்களின் வளர்ச்சி குறையும். இறந்த செல்கள் சருமத்தின் உள்ளேயே சேர்வதும் அதிகமாகும். 21 நாட்களுக்கு ஒருமுறை ஃபேஷியல் செய்வதன் மூலம் இறந்த செல்கள் சேர்வதை சரி செய்து, சருமத்துக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கலாம். ஃபேஷியலில் சருமம் ஆழம் வரை சுத்தப்படுத்தப்படுகிறது. இறந்த செல்கள் ஸ்க்ரப் செய்து அகற்றப்படுகின்றன.

பிறகு மசாஜ் செய்து, முகத் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன. கடைசியாக போடப்படுகிற மாஸ்க், சருமத் தசைகளை டைட்டாக்கி, முழுமையான அழகைத் தருகிறது. 20 வயதுக்குப் பிறகு ஃபேஷியலை ஆரம்பிக்கலாம். உங்கள் சருமத்தின் தன்மை எப்படிப்பட்டது… அதற்கு எந்த மாதிரி பொருட்கள் ஏற்றுக் கொள்ளும் என்கிற தகவல்களை அழகுக் கலை நிபுணருடன் ஆலோசனை செய்த பிறகே ஃபேஷியல் செய்ய வேண்டும். பொதுவாக ஃபேஷியல் என்பது செய்த உடனேயே அதன் பலனைக் காட்டாது.

அடுத்தடுத்த நாட்களில்தான் அதன் பலன் தெரியும். அவசரமாக ஒரு முக்கியமான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற நிலையில் ஃபேஷியலின் மூலம் இன்ஸ்டன்ட் பலனை எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஃப்ரூட் மாஸ்க் ஃபேஷியலை செய்து கொள்ளலாம். சிலவகை ஃபேஷியல்களை எல்லா வயதினருக்கும் எல்லா வகையான சருமங்களுக்கும் செய்ய முடியாது.

உதாரணத்துக்கு சரும நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் லைட்டனிங் ஃபேஷியல், ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியல் போன்றவற்றை எல்லோருக்கும் செய்ய முடியாது. ஆனால், இந்த ஃப்ரூட் மாஸ்க் ஃபேஷியலை 22 வயது முதல் 65 பிளஸ் வயது வரை யாரும் செய்து கொள்ளலாம். இதில் சரும நிறம் மேம்படும். சருமத்துக்கு நல்ல ஈரப்பதம் கிடைக்கும். உடனடி பளபளப்பும் கிடைக்கும்.

ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு குணம் உண்டு என்பதால் அவரவர் சருமத்தின் தன்மை மற்றும் தேவை அறிந்து அதற்கேற்ற பழத்தில் ஃபேஷியல் செய்யப்பட்டு, மாஸ்க் தயாரிக்கப்படும். உதாரணத்துக்கு அதிக எண்ணெய் வழிகிற சருமத்துக்கு வைட்டமின் ‘சி’ சத்தை கொடுக்கும் வகையில் ஆரஞ்சுப் பழமும், ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியலில் வாழைப்பழமும் பயன்படுத்தப்படும்.

9ef74206 1410 47c3 9270 3a2c37112804 S secvpf

Related posts

உங்களுக்கு கருவளையம் சங்கடப்படத்துகிறதா?

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்!

nathan

தக்காளியால் அழகா…

nathan

முகம் பளபளக்கவும் தோல் சுருக்கம் நீங்கவும் குறிப்புகள்

nathan

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

nathan

முகத்தில் எண்ணெய் வடியுதா? இந்த ஃபேஸியல் செய்யலாம். !

nathan

உங்களுக்கு தெரியுமா அதிகநேரம் மேக்கப் கலையாமல் இருக்க என்ன செய்யலாம்?…

nathan