25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
12 jpg
Other News

எதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா? விட்டு விட வேண்டாம்!

வரன் பார்க்கும் போதே சில ராசிக்களில் பிறந்த பெண் அமைந்தால் விட்டு விட வேண்டாம் உடனே ஓகே சொல்லி திருமணம் செய்து விடுங்கள் அந்த வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

சிலருக்கு மட்டுமே மனைவி கடவுள் கொடுத்த வரமாக அமையும் சிலருக்கு சாபமாக அமைந்து விடும்.

தேவ குணம், மனித குணம் இல்லாமல் ராட்சஸ குணம் அதிகம் கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால் அவ்வளவுதான் காலம் பூராவும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

சில ராசி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தேவ குணம் கொண்டவர்களாகவும் மனித குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அத்தகைய ராசி, நட்சத்திரங்களில் பிறந்த பெண் உங்களை தேடி வந்தால் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் விட்டு விட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவரிடம் பாசமும் நேசமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் நெருப்பு ராசி அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் கொண்ட நட்சத்திரங்கள் இந்த ராசியில் உள்ளது. செவ்வாய் ராசி அதிபதியாக இருந்தாலும் கேது, சுக்கிரன், சூரியன் கிரகங்கள் இந்த நட்சத்திரங்களை ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ராசிக்காரர்கள் பொதுவாகவே கோபம் அதிகம் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல குணசாலிகளாகவும் அடுத்தவரின் மனதை புரிந்து கொள்பவர்களாவும் விட்டுக்கொடுத்து செல்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் கணவனை சந்தோஷப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களில் பிறந்தவர்கள் கார்த்திகை 3 பாதங்கள், ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இருப்பார்கள். இந்த ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் காதலும் நேசமும் கொண்டவர்கள். சுக்கிரன் ஆதிக்கம் ராசியில் இருந்தாலும் நட்சத்திரங்களை சூரியன், சந்திரன், செவ்வாய், கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் இருப்பார்கள். அன்பிற்கு அடிமையான இந்த ராசி பெண்கள் தங்களின் கணவர் அன்பானவராக இருந்தால் எதையும் செய்து முடிப்பார்கள்.

மிதுனம்
புத்தி காரகன் புதன் ஆதிக்கம் நிறைந்த புதன் ராசியில் மிருகஷீரிடம் 2 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 3 பாதங்கள் அமைந்துள்ளன. செவ்வாய், ராகு, குரு கிரகங்களின் ஆதிக்கம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருக்கும். கனிவானவர்கள் அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை வெளிப்படுத்துவார்கள். குணவதிகளாக இருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் தங்களின் கணவரிடம் பாசமும், விஸ்வாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் துணையாக அமைந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக மாறி விடும்.

கடகம்
சந்திரன் ஆதிக்கம் நிறைந்த கடகம் ராசியில் புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பாசத்தை மழையாக பொழிபவர்கள். அன்புடனும் அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். குடும்பத்தை கட்டுப்கோப்பாக நடத்துவதில் வல்லவர்கள்.

சிம்மம்
சூரியன் ஆதிக்கம் நிறைந்த சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் இந்த ராசியில் மகம், பூரம், சித்திரை 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன. கேது, சுக்கிரன், சூரியன் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் நேர்மையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். கணவருடன் கரம் கோர்த்து கடைசி வரைக்கும் கூட நடப்பார்கள். இவர்களின் முடிவும் தேர்வும் சரியாகவே இருக்கும்.

மீனம்
குருவின் ஆதிக்கம் நிறைந்த மீனம் ராசியில் பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் உள்ளன. குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மென்மையானவர்கள். அன்பானவர்கள், அனுசரணையானவர்கள். இனிமையான பேச்சும், குணமும் கொண்டவர்கள். அமைதியை விரும்பும் இவர்கள் கணவனுடன் தோளோடு தோள் நிற்பார்கள்.

Related posts

கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு

nathan

பிரேக்டவுன் அனுபவத்தை மீண்டும் உருவாக்கிய அஜித்-த்ரிஷா..!

nathan

விஜய் படத்தில் ஒப்பந்தமான பிரபல நடிகை

nathan

விஜயகாந்த் உடல்நலம் குறித்து திடீரென வீடியோ

nathan

சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரியங்கா மோகன்…

nathan

சிறகடிக்க ஆசை மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

விரும்பதகாத செயல்! பிக் பாஸ் 7 போட்டியாளர் போலீசாரால் கைது

nathan

ஆண் குழந்தை புதிய பெயர்கள் பட்டியல்

nathan

கேரளாவில் குண்டு வைத்தது இவர்தான்..

nathan