வேனிட்டி பாக்ஸ்
ஒரு தவறான உடற்பயிற்சியை அனுபவம் இன்றிச் செய்தால் தசைப்பிடிப்பும் சுளுக்கும் வலியும் ஏற்படுமல்லவா? தவறான அழகு சிகிச்சைகளும் அப்படித்தான் ஆபத்தில் முடியும். முகத்துக்குச் செய்யப்படுகிற தவறான சிகிச்சைகளில் ஃபேஷியலுக்கே முதலிடம். பார்லர்களிலேயே கூட ஃபேஷியலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். முகத்தசைகளுக்கான பயிற்சியே ஃபேஷியல் என்பதால், தவறான மசாஜ், முகத்தை அழகாக்குவதற்குப் பதில் எதிர்மறையான பலனையே தரும்.முறையான ஃபேஷியல் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, வீட்டிலேயே உபயோகிக்கக்கூடிய ஃபேஷியல் கிட் பாதுகாப்பானதா என்கிற வரை ஃபேஷியல் தகவல்களைச் சொல்கிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல்.
முதலில் சருமத்தை முறையாக கிளென்ஸ் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் பார்லர்களில் டபுள் கிளென்ஸ் முறையில் சருமத்தை சுத்தப்படுத்துகிறார்கள். அதன் மூலம் நாள்கணக்காக சருமத்தின் ஆழத்தில் படிந்த அழுக்குகளும், மாசும் நீங்கி, சருமத் துவாரங்கள் திறந்து கொள்ளும்.
அடுத்தது ஸ்க்ரப். இதை எக்ஸ்ஃபோலியேஷன் என்றும் சொல்கிறோம். சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, சருமத்துக்கு அடுத்தக்கட்ட பொலிவைத் தரக்கூடியது. ஸ்க்ரப் என்பது திரவ வடிவிலோ, பவுடர் வடிவிலோ, ஜெல் வடிவிலோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இது ரொம்பவும் நைசாக இல்லாமல், லேசான கொரகொரப்புடன் இருக்கும்.
பலரும் அதிக கொரகொரப்புடன் இருக்கும் ஸ்க்ரப்தான் சருமத்தை சிறப்பாக சுத்தம் செய்யும் என்கிற நினைப்பில் பெரிய துகள்களாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது மிகவும் தவறு. இப்படிச் செய்வதன் மூலம் சருமத்தில் கோடுகள், கீறல்கள் விழும். ஸ்க்ரப் எத்தனை பெரிய துகள்களைக் கொண்டுள்ளது என்பதைவிடவும், இறந்த செல்களை நீக்கும் அதன் தன்மை எத்தகையது என்பதே முக்கியம்.
சமீப கால ஃபேஷியல்களில் சீரம் உபயோகிப்பது ஒரு முக்கிய ஸ்டெப்பாக இருக்கிறது. சீரம் என்பவை மிக நுண்ணிய மூலக்கூறு களைக் கொண்டவை. எனவே, சருமத்தின் உள்ளே சுலபமாக ஊடுருவும். சருமத்தின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப இப்போது விதம் விதமான சீரம்கள் கிடைக்கின்றன. இளமைத் தோற்றம் தர, தொய்வை நீக்க, நிறத்தைக் கூட்ட, வறட்சியைப் போக்க.. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு சீரம் உபயோகிக்கப்படும்.
ஃபேஷியலின் மிக முக்கியமான ஸ்டெப் மசாஜ். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவரவர் சருமத்தின் தன்மை அறிந்து முறையாக மசாஜ் செய்யப்பட வேண்டும். சில வகை சருமத்துக்கு அழுத்தமான மசாஜும், சிலருக்கு மிக மென்மையான மசாஜும் செய்யப்பட வேண்டியிருக்கும். ஃபேஷியல் என்றதுமே அடித்து, தட்டி செய்கிற மசாஜ் என நினைத்துக் கொண்டால், அது தவறு. முறையான மசாஜ் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
அடுத்ததாக ஃபேஸ் பேக். இதிலும் நிறைய வகைகள் உள்ளன. சருமத்தை டைட் ஆக்கும் பேக், நிறம் கூட்டும் பேக், ஈரப்பதத்தைத் தக்க வைக்கிற பேக், எண்ணெய் பசையை அகற்றுகிற பேக் என பல உண்டு. எந்த ஃபேஷியல் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்தே அதற்கான பேக் தீர்மானிக்கப்படும்.
கடைசியாக மாஸ்க். இது சருமத்தை டோன் செய்து, மொத்த ஃபேஷியலுக்கும் முத்தாய்ப்பாக அமையக்கூடியது. ஃபேஷியலுக்கு பிறகு மாஸ்க் போட்டால்தான் முழுப் பலனும் கிடைக்கும். சிலர் அவசரத்துக்கு வெறும் மாஸ்க்கை மட்டும் உபயோகிப்பார்கள். அதில் எந்தப் பயனும் இல்லை.
வீட்டிலேயே ஃபேஷியல் பாதுகாப்பானதா?
பார்லருக்கு போனால் செலவு. அலைச்சல். நேர விரயம். அதனால் பாதி செலவில், அலைச்சலின்றி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்ளும் எண்ணத்தில் ஃபேஷியல் கிட்டுகளை வாங்கி உபயோகிக்கிற பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். ஃபேஷியலை பொறுத்தவரை சுயமாக செய்து கொள்வதற்கும் அடுத்தவர் செய்து விடுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சாதாரணமாக தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்வதிலேயே இதை உணரலாம். இன்னொருவர் செய்து விடுகிற போது இதமாக, நிறைவாக இருக்கும். அதே போலத்தான் ஃபேஷியலும்.
இப்போது கடைகளில் ஒயிட்னிங் ஃபேஷியல் கிட், கோல்டன் ஃபேஷியல் கிட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் ஃபேஷியல் கிட்டெல்லாம் ரெடிமேடாக கிடைக்கிறது. அதிலும் 300 ரூபாய்க்கெல்லாம் தங்க ஃபேஷியல் கிட் கிடைக்கிறது என வாங்கி உபயோகிக்கிறார்கள். தங்கம் விற்கிற விலைக்கு 300 ரூபாய்க்கு முழு ஃபேஷியல் கிட் கிடைக்குமா என யோசிக்க வேண்டும். பணத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்காக வீட்டிலேயே ஃபேஷியல் செய்வதைத் தவறு எனச் சொல்லவில்லை. எளிமையான பொருட்களைக் கொண்டு, சின்னச் சின்ன ஸ்டெப்புகளை பின்பற்றி செய்கிற போது, ஃபேஷியல் செய்த அளவுக்கு ரிசல்ட் கிடைக்காவிட்டாலும், சருமம் சுத்தமாக, பளிச்சென மாறும்.
எலுமிச்சைச் சாறும், மினரல் வாட்டரும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்துக்கு கிளென்ஸராக உபயோகிக்கலாம். அரை டீஸ்பூன் தேனுடன், 1 டீஸ்பூன் பால் கலந்து, கிளென்ஸ் செய்த பிறகு சருமத்தில் தடவலாம். இது டோனர் போன்று செயல்படும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ைவத்திருந்து, கழுவினால் ஆன்ட்டி ஏஜிங் மாஸ்க் போன்று வேலை செய்யும். சரும சுருக்கங்களை நீக்கும். ரொம்பவும் பழுத்துப் போன வாழைப்பழங்களை இனிமேல் வீணாக்காதீர்கள். மாஸ்க்காக பயன்படுத்துங்கள்.
கேரட்டை சுத்தம் செய்து வேகவைத்து மசித்து முகத்தில் மாஸ்க் போல உபயோகிக்கலாம். இதுவும் ஆன்ட்டி ஏஜிங் தன்மை கொண்டது. ரொம்பவும் எண்ணெய் வழிகிற சருமம் என்றால் தக்காளிச் சாற்றில், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவலாம். மாஸ்க்கை அகற்றும் போது எப்போதும் ஈர விரல்களால் அவற்றை லேசாகத் தேய்த்து வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் கொடுத்து எடுக்க வேண்டும்.
கண்களைச் சுற்றி கரு வளையங்கள் இருந்தால் பச்சை உருளைக்கிழங்கைத் துருவி வைத்திருந்து கழுவினால் போதும். சுலபமான இந்த வழியை விட்டுவிட்டு, நீங்களாக ஐ ஜெல் அல்லது கிரீம் வாங்கி, கண்களுக்கடியில் அழுத்தமாக மசாஜ் செய்தால், கரு வளையங்கள் அதிகரிப்பதுடன், சுருக்கங்களும் வரும்.
வீட்டு ஃபேஷியலில் தவிர்க்க வேண்டியவை!
அதிக வாசனை உள்ள மசாஜ் கிரீம்களை தவிர்த்து விடவும். செயற்கையாக கலர் சேர்க்கப்பட்டவையும் பாதுகாப்பானவை அல்ல.ஸ்க்ரப்பில் பெரிய துகள்கள் இருக்கும்படி வாங்க வேண்டாம். மசாஜ் செய்து கொள்ளும் போது எப்போதும் கழுத்துப் பகுதியில் இருந்து மேல் நோக்கியே செய்ய வேண்டும். தவறாகச் செய்தால் சருமம் தொய்வடைந்துவிடும்.
பவுடர் வடிவிலான பேக் போடும் போது, அது சருமத்தில் முழுக்கவும் காய்ந்து வறண்டு போகும் அளவுக்கு விடக்கூடாது. பார்லர்களில் மாஸ்க் போடும் முன், சீரம் உபயோகிப்பார்கள். வீட்டு உபயோகத்துக்கு அது கிடைக்காது. எனவே, முதலில் சருமத்தில் லேசாக மாயிச்சரைசர் தடவிவிட்டு, பிறகு மாஸ்க் போடலாம்.
முல்தானி மிட்டியை தினமும் முகத்தில் தடவிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அது இயற்கையான பொருள்தான் என்றாலும், அடிக்கடி உபயோகித்தால் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தையும் எண்ணெய் பசையையும் அகற்றி விடும். முல்தானி மிட்டி போன்றவற்றை ரொம்ப நேரம் சருமத்தில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
கூடியவரையில் கோல்ட் ஃபேஷியல் போன்ற ஸ்பெஷல் ஃபேஷியல்களை பார்லரிலேயே செய்து கொள்வதுதான் சிறந்தது. பார்லர்களில் செய்கிற போது, குறிப்பிட்ட கிரீம் மற்றும் ஜெல்லின் உள்ளே இருக்கும் நானோ துகள்கள் சருமத்தினுள் ஊடுருவும்படி மைக்ரோ கரன்ட் உபயோகித்தும் மெஷின் உபயோகித்தும் அதன் முழுமையான பலன் கிடைக்கச் செய்வார்கள்வேனிட்டி பாக்ஸ்

கூடியவரையில் கோல்ட் ஃபேஷியல் போன்ற ஸ்பெஷல் ஃபேஷியல்களை பார்லரிலேயே செய்து கொள்வதுதான் சிறந்தது. பார்லர்களில் செய்கிற போது, குறிப்பிட்ட கிரீம் மற்றும் ஜெல்லின் உள்ளே இருக்கும் நானோ துகள்கள் சருமத்தினுள் ஊடுருவும்படி மைக்ரோ கரன்ட் உபயோகித்தும் மெஷின் உபயோகித்தும் அதன் முழுமையான பலன் கிடைக்கச் செய்வார்கள்.