26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
alien Human Satan
அழகு குறிப்புகள்

ஏலியன் தோற்றத்துக்காக மூக்கு, காது, விரல்களை நீக்கிய ‘மனித சாத்தான்’

பிரேசிலில் ஏலியனை போன்று காட்சி அளிக்க விரும்பி மூக்கு, காது, விரல்களை நீக்கிய நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்தவர் மிச்செல் ஃபாரோ டோ பிராடோ. இவரது உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ (பச்சை குத்தல்) ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 60க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டு உள்ளன. மூக்கின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு உள்ளது. வயிற்று பகுதியிலும் சில நீக்கங்களை செய்துள்ளார்.

ஏலியன் தோற்றத்தில் தனது கைகள் தெரிய வேண்டும் என்பதற்காக விரல்களில் ஒன்றையும் அவர் நீக்கியுள்ளார். இந்த வினோத உருவ அமைப்புடன் காணப்பட கூடிய அவர் மனித சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.alien Human Satan2

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் முக கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பல நாடுகளில் இந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனை கொண்டாடும் வகையில், காதுகள் இருக்கும்வரையே முக கவசம் அணிய வேண்டிய தேவை ஏற்படும். அதனால் அவற்றை நீக்கி விடலாம் என முடிவு செய்த மிச்செலுக்கு தற்போது இரண்டு காதுகளும் கிடையாது.

முக கவசம் அணிய தேவையில்லாத நிலையில், இந்த காதுகளும் தேவையில்லை என்று கூறி சிரிக்கிறார். இதற்காக கட்டூ மொரினோ என்ற மெக்சிகோ நாட்டை சேர்ந்த உடல் வடிவமைப்பாளர் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார்.

இதுபோன்ற வித்தியாச தோற்றத்துடன் மிச்செல் வலம் வந்தபோதும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எப்போதும் தனக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று கூறி திகைக்க வைக்கிறார்.News & image Credit: dailythanthi

Related posts

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

sangika

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

sangika

கரும்புள்ளிகளுக்கு ‘குட்பை’!

nathan

தினமும் ஆயில் புல்லிங்!…

nathan

பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..

sangika

இதைTry பண்ணுங்க..! முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக…

nathan

46 வயது திருமணமாகாத நடிகை -இப்படியொரு போஸ்-ஆ!!

nathan

அழகா இருக்கணுமா? பெண்கள் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இதோ…

nathan

ட்ரை பண்ணி பாருங்க ! இதோ இயற்கையான மாதுளை “FACE PACK”

nathan