25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pitza e1454343661245
சைவம்

சப்பாத்தி பீட்ஸா!!

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
துருவிய சீஸ் – 1/4 கப்
சாஸ் செய்வதற்கு.
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 12 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 கப்
தக்காளி – 1 (பெரியது)
தக்காளி சாஸ் – 1 டேபிள்
ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/8 டீஸ்பூன்

செய்முறை:
கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளியில் உள்ள தோல் வெளிவரும் வரை வேக வைத்து இறக்கி, தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து சாஸ் போன்று நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் குடைமிளகாயை போட்டு, எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒவ்வொரு சப்பாத்திகளாக எடுத்து, அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸை தடவி, மேலே வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு, 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்தால், சப்பாத்தி பிட்சா ரெடி!!!
pitza e1454343661245

Related posts

வெண்டைக்காய் பொரியல்

nathan

தக்காளி பிரியாணி

nathan

காரசாரமான கோவைக்காய் வறுவல் செய்வது எப்படி

nathan

சிம்பிளான… காளான் கிரேவி

nathan

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

nathan

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

nathan

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan