28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
sorakkaiparuppukuzhamburecipeintamil 1615278834
அழகு குறிப்புகள்

சுரைக்காய் பருப்பு குழம்பு

தேவையான பொருட்கள்:

* சுரைக்காய் – 1/2 (நறுக்கியது)

* பாசிப் பருப்பு – 1/2 கப்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* வரமிளகாய் – 3

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சுரைக்காயை நன்கு கழுவி உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை குக்கரில் போட்டு, அத்துடன், தக்காளி சேர்த்து 3 கப் அல்லது தேவையான நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

* பின் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

* பிறகு குக்கரில் உள்ள பாசிப்பருப்பு மற்றும் சுரைக்காய் துண்டுகளை போட்டு, அதோடு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான சுரைக்காய் பருப்பு குழம்பு தயார்.

Related posts

சர்வைவர் வெற்றியாளர் இவர் தான்! பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

nathan

ஃபேஷியல்

nathan

பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா

nathan

முகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது

nathan

கைகளை பராமரிப்பது எப்படி?

nathan

இரவு கிரீம்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் 11 அற்புத நன்மைகள்

nathan

நீங்களே பாருங்க.! நடிகை ஜெனிலியா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு இவ்வளவு க வ ர்ச் சியா..??

nathan

புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!இனி இதுக்கெல்லாம் நோ…

nathan

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan