28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
cover 1569303035
அழகு குறிப்புகள்

குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள்

பெற்றோராக மாறுவது குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை கிருமிகளிலிருந்து பாதுகாப்பது அவசியம். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதால், பாக்டீரியா தொற்றுக்கு ஆளாக நேரிடும் மற்றும் காய்ச்சல், நோய்கள் மற்றும் சில தேவையற்ற வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளை கிருமிகளிலிருந்து பாதுகாக்க வீட்டின் சில பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். எனவே புதிய குழந்தையுடன் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன.

மூலை முடுக்குகள்
வீட்டின் மூலை முடுக்குகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், கிருமிநாசினிகள் மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மாத்திரைகளைக் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள். தரைகள், அடுப்பறைகள், குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய இடங்களைக் கிருமிநாசினியைப் பயன்படுத்தி கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வையுங்கள்.

 

காலணிகள்

உங்கள் காலணிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் அதிக அளவில் இருக்கும் அவற்றை நீங்கள் வீட்டிற்குள் அணிந்து செல்லும் போது அவை குழந்தைகளைப் பாதிக்கக் கூடும். எனவே உங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே கழற்றிவிட்டுச் செல்லுவது நல்லது. அதே போல் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அவர்களின் காலணிகளையும் வெளியே விடுமாறு சொல்லுங்கள்.

ஜன்னல்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையான காற்று மிகவும் அவசியம் எனவே வீட்டின் ஜன்னல்களை எப்போதும் திறந்து வையுங்கள். குழந்தைகள் ஏசியில் தூங்குவதை விட இயற்கையான காற்றோட்டத்தில் தூங்கும் போது நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பெறுவார்கள்.

சமையலறை

உங்களின் சமையலறையைத் தினமும் கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் மீன், கோழி மற்ற இறைச்சி போன்றவற்றைச் சமைத்த பிறகு பாக்டீரியாக்களை அகற்றுவதற்குக் கிருமிநாசினி பயன்படுத்திச் சுத்தப்படுத்துங்கள். மேலும் சமையலறை தரையைத் துடைப்பம் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

குளியலறை

குளியலறை மற்றும் கழிப்பறை இவை இரண்டும் அதிகமான கிருமிகள் வசிக்கும் இடமாகும். எனவே குளியலறை மற்றும் கழிப்பறையின் எல்லா முலை முடுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அத்துடன் காலணிகளை அணிந்து பாத்ரூம் பயன்படுத்துவது சிறந்தது.

கையுறை

நீங்கள் எப்போது எல்லாம் வீட்டில் உள்ள சாமான்கள், பொருட்கள் மற்றும் பாத்ரூம்களை சுத்தம் படுத்துகிறீர்களோ கண்டிப்பாக கைகளில் கையுறை அணிய வேண்டும். ஏனெனில் மகப்பேற்றுக்குப் பின்பு உங்கள் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும் எனவே சரும எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் நீங்கள் உங்கள் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருக்கும் போது குழந்தைகளைப் பாதிக்கக்கூடும். ஆதலால் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

 

குழந்தைகள்

பிறந்த குழந்தைகள் இருக்கும் இடங்களும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்கள் மற்றும் குழந்தைகளின் உடைகளை டெட்டோல் பயன்படுத்தி அலசுங்கள். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் சுத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Related posts

காலையில் வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்

nathan

வருண் அக்ஷராவுக்கு திடீர் திருமணம்?பரவும் புகைப்படம்!

nathan

கின்னஸ் சாதனை – இஸ்ரேலில் விளைந்த உலகின் பெரிய ஸ்ட்ராபெர்ரி பழம்

nathan

இந்த 5 ராசிக்காரங்க மாதிரி அன்பா இருக்க யாராலயும் முடியாதாம்…

nathan

35 வயதில் ஜொலிக்கும் சமந்தாவின் அழகு ரகசியம் இதுதானாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan

பச்சை வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

nathan

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika