25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
09 1431157181 3 visionrelatedstress
கண்கள் பராமரிப்பு

கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா…?

கண்கள் துடிப்பது பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன. ஆனால் உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமின்றி, நம் இருக்கும் மனநிலையையும் குறிக்கும். இங்கு கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களிடம் இருக்கும் மூடநம்பிக்கையை கைவிடுங்கள்.

மன அழுத்தம்

நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

அதிகப்படியான சோர்வு

தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வதைக் குறைத்திடுங்கள்.

கண்களில் அதிகப்படியான அழுத்தம்

கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும். எனவே கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வது போல் இருந்தால், கண்களுக்கு ஸ்பெஷலான கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். இதனால் கணினி திரையின் ஒளியால் கண்கள் விரைவில் களைப்படையாமல் இருக்கும்.

காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால்

காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அப்போது கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

வறட்சியான கண்கள்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடையும். உங்கள் கண்கள் வறட்சியுடன் இருந்தால், அது கண்கள் துடிப்பதன் மூலம் வெளிப்படும்.

கண் அலர்ஜி

கண்களில் அலர்ஜி இருந்தால், அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கண்கள் அடிக்கடி துடிக்கவும் செய்யும்.

வைட்டமின் டி மற்றும் பி12 குறைபாடு

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதன் மூலம் உடலில் தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். அதிலும் கை, கால் தசைகள் மட்டுமின்றி, கண் தசைகளும் சுருங்கி விரியும்.

09 1431157181 3 visionrelatedstress

Related posts

கண்களுக்கு அடியில் சதைப் பை தொங்குகிறதா? ஆரம்புத்திலேயே கவனிங்க!!

nathan

அழகிய புருவங்களைப் பெறுவதற்கு இயற்கை முறையில் இதனைப் பயன்படுத்துங்கள்.

sangika

உங்கள் கண்களில் ஏற்பட்டுள்ள‍ வறட்சியை போக்கி கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும்!…

sangika

கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்

nathan

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

வசீகரிக்கும் கண்களுக்கு

nathan

அழகான புருவங்களுக்கு

nathan