27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
food33
சிற்றுண்டி வகைகள்

கேரளத்து ஆப்பம் செய்முறை

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்
தேங்காய் -1 /2 கப் (துருவியது)
இளநீர் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, ஆப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை தேய்க்கவும். பின் ஒரு கரண்டி ஆப்ப மாவை ஊற்றி, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி, பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் மூடவும். முறுகலாக வரும் போது அதனை எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான கேரள ஸ்டைஸ் அப்பம் ரெடி. இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

food33

Related posts

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா

nathan

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி

nathan

பிரெட் பீட்சா

nathan

முட்டை தோசை

nathan

சுவையான ரச வடை செய்வது எப்படி…

nathan

மெது போண்டா செய்வது எப்படி

nathan

ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan