ரசாயனம் மற்றும் அமோனியா அடிப்படையில் தயாரிக்கப்படும் லிக்விட் ஹேர் டை உங்கள் தலைச்சருமத்திற்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானதாகும். பொடி சார்ந்த முடிச்சாயங்களில் கூட ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவை உங்கள் கண்களையும், கண் பார்வையையும் கூட பாதிக்கும். இந்த பொருட்களால் நீங்கள் உங்கள் முடியை மிக வேகமாக இழப்பீர்கள்.
மருதாணியால் செய்யப்படும் பொடி சார்ந்த முடிச்சாயத்தை பயன்படுத்தினால் முடி வறட்சியடையும். அதே போல் மிக விரைவிலேயே நிறமும் போய் விடும். அடிக்கடி நிறச்சாயத்தை பயன்படுத்தினால் உங்கள் முடி பொலிவிழந்து காணப்படும். அதனால் முடிச்சாயம் நீடித்து நிலைக்க, பூண்டில் இருந்து உரிக்கப்பட்ட தோலை கொண்டு இயற்கையான முறையை கையாளலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு (பெரியது) ஆலிவ் எண்ணெய் காட்டன் துணி
செய்முறை
1. பூண்டின் வெளித்தோலை பெரிய அளவில் (அவற்றை வறுக்கும் போது அளவு குறைந்து விடுவதனால்) எடுத்துக் கொள்ளுங்கள். 2. பூண்டின் தோலை ஒரு வாணலியில் போட்டு, அது கருகும் வரை வறுக்கவும். 3. காட்டன் துணியை கொண்டு இந்த சாம்பலை வடிகட்டி, மென்மையான பொடியை பெறவும். 4. இந்த பொடியுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து, முடிச்சாயம் பேஸ்ட் போன்று உருவாக்க அதனை நன்றாக கிண்டவும்.
செய்முறை
5. இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, 7 நாட்களுக்கு இருட்டில் வைத்து பாதுகாக்கவும் (குளிர்சாதன பெட்டியில் அல்ல). 6. ஏழு நாட்களுக்கு பிறகு, முடிச்சாயம் போல் இதனை தலை முடியில் தடவிக் கொள்ளவும். முடிந்த வரை இதனை சாயங்கால வேளையில் தடவிக் கொண்டு, மறுநாள் காலை குளித்து விடவும். 7. இன்னும் சிறந்த பலனைப் பெற வேண்டுமானால், மறுநாள் காலை தலைக்கு குளிக்காமல், 2-3 நாள் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் தலைக்கு குளிக்கவும்.
குறிப்பு
இந்த முடிச்சாயம் உங்கள் முடிக்கு இயற்கையான தோற்றத்தை அளிப்பதோடு, நீடித்தும் நிலைக்கும். இந்த கலவையில் ஆலிவ் எண்ணெய் இருப்பதால், உங்கள் முடி ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உணவுகள்
உங்கள் முடி இயற்கையான நிறத்தில் ஆரோக்கியமாக இருக்க பையோடின், ஜின்க், அயோடின், இரும்பு மற்றும் புரதம் நிறைந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
இயற்கையான முறையில் சுருட்டை முடியை பெற…
* மேற்கூறிய 1, 2, 3, 4 படிகளை பின்பற்றவும். அதன் பின் 30 நிமிடங்களுக்கு பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் தலைச்சருமத்தின் மீதுள்ள முடி வேர்களின் மீது தடவவும். இந்த பேஸ்ட் உங்கள் தலைச்சருமத்தில் 1 மணிநேரத்திற்கு அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முடியை கழுவிவிடுங்கள். * இந்த செய்முறை உங்கள் முடியை அதன் வேரிலிருந்தே சுருள வைக்கும். உங்கள் முடி மேலும் சுருள, இந்த செய்முறையை 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் சில மாதங்களுக்கு தொடரவும்.