26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld3963
தலைமுடி சிகிச்சை

கூந்தல்

மற்ற நாட்களை விட மழை நாட்களில் உங்கள் கூந்தல் மிக மோசமாக இருப்பதை உணர்வீர்கள். அந்த நாட்களில் காற்றில் உள்ள ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். அதுவே பலவகையான கூந்தல் பிரச்னைகளுக்குக் காரணமாகும். ஒரு செடிக்கு அளவுக்கதிகமாக தண்ணீர் ஊற்றினால், அதன் வேர்கள் பலவீனமாகி, செடியே இறந்து போகும். அப்படித்தான் காற்றிலுள்ள அதிகப்படியான ஈரப்பதமும் கூந்தலுக்குக் கேடு ஏற்படுத்தும். அந்த ஈரப்பதமானது மண்டைப் பகுதியில் வியர்வையை ஏற்படுத்தி, அரிப்பை உண்டாக்கி, கூந்தலின் வேர்க்கால்களை பலமிழக்கச் செய்து உதிர வைக்கும். கூந்தல் பிசுபிசுப்பென மாறும். பொடுகு வரும். எனவே, மழை மற்றும் பனிக்காலங்களில் உங்கள் கூந்தலுக்கு கூடுதல் கவனிப்பு அவசியம்.

மழை மற்றும் பனிக்கால கூந்தல் பராமரிப்பு

மழை மற்றும் பனிக் காலத்தில் உடம்புக்குக் குளிக்கவே அலுத்துக் கொள்கிறவர்கள் பலர். தலைக் குளியலுக்கெல்லாம் தற்காலிக விடுப்பு விடாமல், தினமுமே தலைக்குக் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த சீசனுக்கு மட்டுமாவது உங்கள் கூந்தலின் நீளத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது பராமரிக்க எளிதாக இருக்கும். கூந்தல் வளர்க்க இது உகந்த நேரமல்ல. கிரீம் வடிவிலான ஷாம்புக்களை தவிர்த்து, கிளாரிஃபையிங் (Clarifying shampoo)
உபயோகிக்கவும்.

தலைக்கு எண்ணெய் வைப்பதைக் குறைத்துக் கொள்ளவும். ஷாம்பு குளியலுக்குப் பிறகு கண்டிஷனர் உபயோகிக்கவும். அதை மண்டைப் பகுதியில் படாமல், கூந்தலுக்கு மட்டும் உபயோகிக்கவும். ஏற்கனவே பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நாட்களில் அது இன்னும் அதிகமாகும். அவர்கள் வேப்பிலையை அரைத்து அதன் விழுதைத் தலையில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அது இந்த நாட்களில் உங்கள் கூந்தலை வறண்டு போகாமல் காக்கும். கூந்தலை அழகுப்படுத்த வழக்கமாக நீங்கள் உபயோகிக்கிற ஸ்டைலிங் பொருட்களை இந்த சீசன் முடிகிற வரை நிறுத்தி வையுங்கள். அவை உங்கள் கூந்தலை அதிக பிசுபிசுப்பாக்கி, அழுக்கு சேரக் காரணமாகும்.

முன் எப்போதும் இல்லாததைவிட, இந்த நாட்களில் கூந்தல் உதிர்கிறதே எனக் கவலைப்பட வேண்டாம். அது சகஜமானதுதான். சீசன் மாறினால் தானாக சரியாகும்.மழையில் நனைந்து விட்டால், வீட்டுக்கு வந்ததும் உங்கள் கூந்தலை சுத்தமான தண்ணீரில் அலச மறக்காதீர்கள்.

பனிக்காலப் பராமரிப்பு…

இந்த நாட்களிலும் தினமும் மைல்டான ஷாம்பு உபயோகித்து கூந்தலை அலசுங்கள். கூந்தல் வறண்டு விடுமோ எனப் பயப்பட வேண்டாம்.ரொம்பவும் வறண்ட கூந்தலை உடையவர்கள் என்றால், தலைக்குக் குளித்ததும் லீவ் இன் கண்டிஷனர் உபயோகிக்கலாம். அது உங்கள் கூந்தலை மென்மையாக வைக்கும்.

குளிருக்கு இதமாக வெந்நீரில் குளித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், வெந்நீர் குளியல் உங்கள் கூந்தலுக்கு உகந்ததல்ல. அது உங்கள் கூந்தலை வறண்டு போகச் செய்து, பலவீனமாக்கும். ஏதேனும் ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக்கவும். அதை மண்டைப் பகுதியில் தடவி, மிக மென்மையாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் ஊறவிட்டு, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றிக் கட்டி, ஆவி இறங்கும்படி செய்யவும். வெந்நீரின் சூடு குறைகிற வரை செய்துவிட்டு, மைல்டான ஷாம்பு உபயோகித்து அலசவும். கண்ஷனர் உபயோகிக்க மறக்க வேண்டாம்.

இந்த நாட்களில் பொடுகுப் பிரச்னை தீவிரமடையும் என்பதால் வாரம் இரு முறை Anti dandruff ஷாம்பு உபயோகிக்கலாம். அப்படியும் பொடுகு குறையாவிட்டால் மருத்துவரை அணுக வேண்டும். குளிர்ந்த காற்றானது உங்கள் கூந்தலை வறண்டு, கரடுமுரடாக மாற்றும் என்பதால் வெளியில் செல்கிற போது கூந்தலைப் பாதுகாக்கும் வகையில் துணி கட்டிக் கொள்ளுங்கள்.
ld3963

Related posts

குளிர்காலத்தில் உங்க கூந்தல் பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லைக்கு சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்.:

nathan

சொட்டை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகள்!

nathan

தலை அரிப்பு, கூந்தல் வறட்சிக்கு என்ன செய்யலாம்

nathan

உங்களுக்கு பொடுகு ஓவரா அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

nathan

கூந்தல் மிருதுவாக்கும் ரோஜா இதழ்

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை…பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்!

nathan

குளிரில் கொட்டுமா முடி?

nathan