வெள்ளைப் பூசணிக்காய் – 2 கப்,
சேனைக்கிழங்கு – 1 கப் (இரண்டும் தோல் நீக்கி சதுரமாக நறுக்கியது),
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க.
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
கறிவேப்பிலை – சிறிது.
கடலைப்பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வேக வைக்கவும். அதில் நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும். காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். சீரகம், தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை வேக வைத்த பருப்பு, காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பருப்பின் நிறம் மாறும் போது தேங்காயை சேர்த்து சிவந்த நிறம் வரும் போது காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். இதை பருப்பு மற்றும் காய்கறி கலவையில் சேர்த்து கலக்கவும்.