28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
DSC07233 thumb2
அசைவ வகைகள்

கோழி மிளகு வறுவல் செட்டிநாடு

தேவையானவை:

கோழி-1 கிலோ
வெங்காயம்-300 கிராம்.
இஞ்சி-3 இன்ச் நீளம்
பூண்டு-30 பல்
மிளகு-4 தேக்கரண்டி
சீரகம்-4 தேக்கரண்டி
சோம்பு-2 தேக்கரண்டி
கசகசா-2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-6
புதினா-சிறிதளவு
மல்லி தழை-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிதளவு
தயிர் -3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு-4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு

செய்முறை:

கோழிக்கறியை நன்கு கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.

மிளகு, சீரகம், சோம்பு, கசகசாவை வறுத்து அரைக்கவும்.

பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலையை அரைக்கவும்.

பிறகு, கோழிக்கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலை, தயிர், எலுமிச்சை சாறு, உப்பு போட்டு நன்கு பிசைந்து குளிர் பதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், குளிர் பதனப் பெட்டியில் இருக்கும் கோழி மசாலாவை போட்டு வதக்கவும். தீயை மிதமாக வைக்கவும். 5 நிமிடம் கழித்து தீயை சிம்மில் வைக்கவும். நீர் ஊற்ற வேண்டாம்.

கோழிக்கறி 10 நிமிடத்தில் வெந்துவிடும். நல்ல வறுவல் வேண்டுமெனில் ஒரு 5 -10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்கலாம். இறக்கி, மல்லி தூவி அலங்கரிக்கவும். பிரியாணி , சப்பாத்தி, தோசை எதனுடனும் இணைத்து சாப்பிடலாம்.

DSC07233 thumb2

Related posts

ருசியான நாட்டுக்கோழி வறுவல். ரொம்ப சிம்பிளா செய்ய,இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க

nathan

புதினா சிக்கன்

nathan

சுறா மீன் புட்டு

nathan

யாழ்ப்பாண முறையிலான ஆட்டிறைச்சி குழம்பு சமையால்

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan

புதினா ஆம்லேட்

nathan

மீன் சொதி

nathan

நண்டு தொக்கு மசாலா

nathan

மிளகு சிக்கன் குழம்பு

nathan