24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
safe image
அசைவ வகைகள்

முட்டை புளி குழம்பு

சுவையான முட்டை புளிக்குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.

தேவையான பொருட்கள்

முட்டை – 6
சின்ன வெங்காயம் – 10 (அல்லது)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி (பெரியது) – 1
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு,எண்ணெய் – தேவையான அளவு
புளி – எலுமிச்சை அளவு

செய்முறை

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்,
மிளகாய்தூள், மிளகு, பூண்டு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அதோடு மஞ்சள்தூள், அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்த்து , உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போய் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு முட்டையை உடைத்து குழம்பில் ஊற்றவும்.
சில நிமிடங்களில் அது வெந்து மேலும்பி வரும்.அதன்பின் அடுத்த முட்டையை உடைத்து ஊற்றவும்.
இவ்வாறாக மீதமுள்ள முட்டைகள் அனைத்தையும் உடைத்து ஊற்றவும்.
குழம்பு நன்கு கொதிக்கும் போது, தீயைக் குறைத்து சிறிய தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

குறிப்பு
முட்டைகளை அப்படியே ஊற்ற விரும்பாதவர்கள் , தனியாக வேக வைத்து எடுத்து, தோலுரித்து மேலும் கீழும் கீறி குழம்பு கொதிக்கும்போது போடலாம்.ஒரு முட்டையை மட்டும் உடைத்து ஊற்றிக் கொள்ளலாம்

safe image

Related posts

கோழி ரசம்

nathan

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

nathan

சிக்கன் மன்சூரியன்

nathan

இறால் வறுவல்: செய்முறைகளுடன்…!

nathan

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் – KFC Style Fried Chicken

nathan

சோயா இறைச்சி பொரியல்

nathan

மட்டன் பிரியாணி,பிரியாணி, மட்டன், மட்டன் பிரியாணி

nathan

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

nathan