நீருக்கடியில் உள்ள அற்புதமான திமிங்கல கல்லறையை படம்பிடித்த ஸ்வீடன் நாட்டு புகைப்படக் கலைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
“ஸ்கூபா டைவிங் 2022” என்ற நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் போட்டியில் வைட் ஆங்கிள் ஷாட் பிரிவில் ஸ்வீடிஷ் புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் முதல் பரிசை வென்றுள்ளார்.
மேலும், டாசன் மற்றும் அவரது உதவியாளர் அன்னா வோன் போடிச்சர் ஆகியோர் கிரீன்லாந்தில் உள்ள தாசிலாக் விரிகுடாவில் 3 அடி நிரம்பிய பனிக்கட்டிக்கு கீழ் இருக்கும் படங்கள் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
கிரீன்லாந்தில் உள்ள தாசிலாக் விரிகுடாவில் உள்ளூர் இன்யூட் வேட்டைக்காரர்கள் திமிங்கலத்தின் சடலங்களை சேகரிக்கின்றனர்.
அவற்றை உரித்த பின்னர், திமிங்கல எலும்புகள் கடலில் வீசப்படுகின்றன. அவர் நீருக்கடியில் தனது கேமராவில் படம்பிடித்த திமிங்கல கல்லறையின் சில புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “ஸ்கூபா டைவிங் இதழ் எனது படத்தை வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
I’m very honored that Scuba Diving Magazine choose my image as a winner of 2022 in the wide-angle category. Last but not least another image also got awarded with an honorable mention. And a big thank you for the first prize onboard the luxurious Red Sea Aggressor III in 2023 😊 pic.twitter.com/vHGh3uMArE
— Alex_Dawson_Photography (@AlexDawsonPhoto) September 21, 2022