24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
vellaii e1453296506807
முகப் பராமரிப்பு

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க

நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்

பாதாம்

சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

கடலை மாவு

தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

மாட்டுப் பால்

தினமும் மாட்டுப் பால் கொண்டு முகத்தை பலமுறை துடைத்து எடுத்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும், சருமத்தின் நிறமும் மேம்பட்டும் காணப்படும்.

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட் பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சரும நிறம் அதிகரிக்கும்.

அரிசி மாவு மற்றும் தேன்

2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

மஞ்சள், எலுமிச்சை சாறு, பால்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க இந்த ஃபேஸ் பேக்கைப் போடலாம். அது சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

vellaii e1453296506807

Related posts

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

nathan

அம்மைத் தழும்புகளை செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும்.

nathan

சூப்பர் டிப்ஸ்! சிறந்த பலனளிக்கும் 7 சரும பராமரிப்பு குறிப்புகள்

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan

சிறிய கண்களை அழகாக காட்ட டிப்ஸ்

nathan

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்க பற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

அடர்த்தியான புருவம் கிடைக்க இந்த வழிகளை உபயோகிச்சு பாருங்க!!

nathan