தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி – 10
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* தக்காளியை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறியதும் தோல் நீக்கி, மிக்சியில் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
* மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* எண்ணெய் வரத் தொடங்கியதும் இறக்கி சேமித்து வைக்கவும்.
* இந்த மிக்ஸை ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.