26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
21 612323a5d
அழகு குறிப்புகள்

இந்தியாவில் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி!

இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம். தம்பதிக்கு பாரதி என்ற மகள் உள்ளார். பாரதிக்கும் சுலப் கன்சல் என்ற இளைஞனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன்னர் தனக்கு சொந்தமாக எண்ணெய் ஆலைகள் இருப்பதாக கன்சல் கூறினார். ஆனால் அவருக்கு சொந்தமாக ஒரு ஆலை கூட இல்லை என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்து பாரதி அதிர்ச்சியடைந்தார்.

மேலும் தொடர்ந்து பாரதியை வரதட்சணை கேட்டு கன்சல் மற்றும் அவர் தாய் கொடுமைப்படுத்தி வந்ததால் அவரின் திருமண கனவும் கலைந்து போனது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வருவதாக நேற்று முன் தினம் இரவு போன் செய்து அவர்களிடம் கன்சல் கூறினார்.

இதற்காக தனது புடவைகள், மற்ற பொருட்களை சூட்கேசில் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சுதீஷ் கவுதமுக்கு போன் செய்த அவர் மாப்பிள்ளை கன்சல், உங்கள் மகள் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதை கேட்ட அவருக்கு தூக்கி வாரி போட்ட நிலையில் கன்சல் சொன்ன மருத்துவமனைக்கு சென்று மகளின் சடலத்தை பார்த்து சுதீஷ் – மீனா கதறி அழுதனர்.

அங்கு வந்த பொலிசாரிடம் அவர்கள் கூறுகையில், எங்கள் மகளை அவரின் கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என பொய் சொல்கின்றனர்.

இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட பாரதி எங்களிடம் பேசினாள் என கதறியபடி கூறினர். இதை தொடர்ந்து வரதட்சணை கொடுமையால் பாரதி இறந்ததாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

nathan

Beauty tips.. முக பளபளப்புக்கு உதவும் திராட்சை

nathan

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

தெரிந்துகொள்வோமா? தினசரி பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் 1௦ நலன்கள்!!!

nathan

மென்மையான கை கால்களின் அழகுக்கு

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

அழகு தரும் குளியல் பொடி

nathan

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika