பாதாம் பேஸ்ட் பாதாமில் சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. அத்தகைய பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்
உளுத்தம் பருப்பு உளுத்தம் பருப்பில் கனிமச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே 1/2 கப் உளுத்தம் பருப்பை நீரிடல் ஊற வைத்து அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வாரத்திற்கு மூன்று முறை இதைக் கொண்டு 15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும்.