தேவையானவை:
வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
தஹினி – 1 டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
பார்ஸ்லே இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வேக வைத்த கொண்டைக் கடலையை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து(கொண்டைக் கடலையை வேக வைத்த தண்ணீர் என்றால் இன்னும் சுவையாக இருக்கும்.) மிக்சியில் சற்று கோரகோரப்பாக அரைக்கவும் . அரைத்த விழுதுடன், தஹினி ,எலுமிச்சை சாறு , பூண்டு , ஆலிவ் ஆயில் .காஷ்மீரி மிளகாய்த்தூள் , உப்பு சேர்த்து நன்கு அரைத்து மேலும் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி பார்ஸ்லே இலை தூவி பரிமாறவும்.சப்பாத்தி,ரொட்டிக்கு சூப்பரான சைட்டிஷ்.