23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
4 face 1572
அழகு குறிப்புகள்

நிறைய க்ரீம்லாம் போட்டு சருமம் தொங்கி போச்சா… இந்த 5 வீட்டு வைத்தியத்தை செய்ங்க…

முதுமையின் சில அறிகுறிகள் மெல்லிய கோடுகள் மற்றும் முகம் மற்றும் கழுத்தில் தோல் தொய்வு. நாம் வயதாகும்போது, ​​​​நமது தோல் இந்த மாற்றங்களுக்கு உட்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இளம் வயதிலேயே தோல் தொய்வடையத் தொடங்குகிறது. இதற்கு அதிக எடை, மது அருந்துதல், அதிக ரசாயனம் உள்ள அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இவை தவிர, நம் வீடுகளில் உள்ள சில பொருட்கள் இயற்கையாகவே சருமத்தை உறுதியாகவும், தொங்காமல் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன.அவை என்ன? அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கே:

சருமத்துக்கு கற்றாழை ஜெல்

தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்க கற்றாழை ஜெல் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். கற்றாழை ஜெல்லில் அதிக அளவில் மாலிக் அமிலம் இருக்கிறது. இது சருமத்தின் எலாஸ்டிசிட்டியை அதிகரிக்கச் செய்யும்.

தேவையான பொருள்கள்

கற்றாழை ஜெல்

பயன்படுத்தும் விதம்

கற்றாழை ஜெல்லை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்கு அப்ளை செய்து 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். இது நன்கு காய்ந்ததும் முகத்தில் இறுக்கமாக இருக்கும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இந்த கற்றாழை ஜெல்லை ஒரு நாள் விட்டு ஒரு சருமத்துக்கு பயன்படுத்தலாம். அதனால் சருமம் நீரேற்றத்துடன் இருக்கும்.

இதில் இன்னொரு முறையும் இருக்கிறது. கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவிப் பாருங்கள். வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். ஓரிருமுறை செய்த பின்னரே உங்கள் தளர்ந்த தொங்கும் சருமம் இறுக்கமாகி இருப்பதை நீங்களே உணர்வீர்கள். முடிந்தவரையில் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லை விட வீட்டிலேயே ஃபிரஷ்ஷான கற்றாழையை உபயோகப்படுத்துங்கள்.பலன் விரைவாகக் கிடைக்கும்.

​முட்டை தேன் பேஸ்பேக்

முட்டையின் வெள்ளைக்கருவில் உயர் புரதங்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இதிலுள்ள எலாஸ்டிசிட்டி தன்மை சருமத்தை நெகிழ்வுத் தன்மையோடு வைத்திருப்பதோடு தொங்கும் தசைகளை இறுக்கமாக்கி கொலாஜன் உற்பத்தியை தூண்டச் செய்யும். சருமத்தின் தன்மையை மேம்படுத்துவதோடு புதிய சரும செல்களை உற்பத்தி செய்து பொலிவை அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்

முட்டையின் வெள்ளைக்கரு – 1

தேன் – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் விதம்

முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேனை சேர்த்து நன்கு அடித்துக் கலந்து கொண்டு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும்.

20 நிமிடங்கள் வரையிலும் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். .இதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்தால் போதும்.

​சருமத்துக்கு ஆயில் மசாஜ்

சருமத்துக்கு ஆயில் மசாஜ் செய்வதால் சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் பசையாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். அதனாலே சருமத்தில் எண்ணெய் அப்ளை செய்ய பயப்படுகிறோம். ஆனால் ஆயில் மசாஜ் செய்வது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி செய்யும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கும்.

தேவையான பொருள்கள்

ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் விதம்

முகத்தை நன்கு கழுவிவிட்டு டவலால் துடைத்துக் கொள்ளுங்கள். ஆலில் ஆயிலை லேசாக சூடுசெய்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து நன்கு வட்ட வடிவில் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.

பின்னர் ஒரு சுத்தமான துணியால் எண்ணெய் முழுவதையும் துடைத்து எடுத்துவிட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது. பாதாம் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டும் சருமத்தை நன்கு மசாஜ் செய்யலாம்.

​காபி – தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்

காபி சருமத்துக்கு மிகச்சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கச் செய்யும். அதோடு நிறமும் மேம்படும். வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் தொங்கும் சருமத்தை ரிப்பேர் செய்து இளமையாக வைத்திருக்க உதவும்.

தேவையான பொருள்கள்

பில்டர் காபி பொடி – 2 ஸ்பூன்
பிரவுன் சுகர் – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை பொடி – கால் ஸ்பூன்
பயன்படுத்தும் விதம்

காபி பொடியுடன் தேங்காய் எண்ணெய், பிரவுன் சுகர், இலவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். முகத்தை க்ளன்ஸ் செய்த பிறகு இந்த ஸ்கிர்ப்பை முகத்தில் தேய்த்து நன்கு 10 நிமிடங்கள் வரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 5 நிமிடம் மட்டும் அப்படியே விட்டுவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரால் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இந்த ஸ்கிரப்பை பயன்படுத்தினாலே போதும். உங்களுடைய சருமம் தளர்ச்சியடையாமல் பொலிவோடு இருப்பதை உணர்வீர்கள்.

​ரோஸ்மேரி ஆயில் – வெள்ளரிக்காய் பேஸ்பேக்

ரோஸ்மேரி ஆயில் உங்களுடைய சருமத்தை நன்கு டோனிங் செய்வதோடு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் சருமத்தின் வயதான தோற்றத்தை தடுப்பதோடு சருமத்தில் எலாஸ்டிசிட்டியையும் மேம்படுத்துகிறது. இதனால் சருமத்தில் சுருக்கள் இன்றி சருமம் இளமையாகவும் மென்மையாகவும் இருக்கும்.

தேவையான பொருள்கள்

வெள்ளரிக்காய் – பாதி அளவு
ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் – 2 ஸ்பூன்
பயன்படுத்தும் விதம்

வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு அதை மிக்சியில் போட்டு நைசான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரோஸ்மேரி ஆயிலையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். இதை வாரத்துக்கு ஒரு முறை செய்தால் போதும். இது சருமத்தை தளர்ச்சியின்றி இறுக்கமாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் வைத்திருக்க உதவும்.

Related posts

இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க…

nathan

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

nathan

சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்

nathan

உங்க வீட்டில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய எளிய குறிப்புக்கள்

nathan

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

25 வருட நட்பு, ஆனா எனக்கு முரளி துரோகம் செய்துவிட்டார் -தேவயானி கணவர் ராஜகுமார்.

nathan

Dry Brushing. பிரபலமாகும் அழகு சிகிச்சை

nathan

ஆடிக்கூழ்

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan