26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
rasi todayjaffna
Other News

உங்களின் ராசிப்படி உங்களுடைய சிறந்த குணம் என்ன?

கடவுளின் படைப்பில் எப்படி ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகை, டிஎன்ஏ இருக்கிறதோ அதேபோல ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமையும், குணமும் இருக்கும். குழந்தைகள் பிறக்கும்போதே அவர்களின் எதிர்காலம் கிரகங்களின் அமைப்பு படி ஜாதகத்தில் கணிக்கப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவையே நமது ராசியை கட்டுப்படுத்துகிறது. ஒருவருடைய பலமும், பலவீனமும் இவற்றை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட திறமைகளை பரிசளித்துள்ளார். ஒருவரின் கோபம், அழுகை, சிரிப்பு, வீரம் என ஒருவரின் குணத்தை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருவரின் ஆளுமையை அவரின் ராசியும் கூட முடிவு செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இங்கே ஒவ்வொரு ராசிக்காரரும் எதில் சிறந்தவராய் இருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
இது நெருப்பின் ராசியாகும், இவர்கள் அதிக ஆர்வமுள்ளவராகவும், தலைமைப்பண்பு உடையவர்களாகவும், சுதந்திர மனப்பான்மை உடையவராகவும் இருப்பார்கள். இரண்டாம் இடத்தில் இருப்பது என்பதே அவர்கள் அகராதியில் கிடையாது. ஒரு செயல் தொடங்கும் போதே அதை தலைமையேற்று நடத்த விரும்புவார்கள். இது அவர்களை தைரியமானவராக காட்டும். அவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளின் விளைவுகளை பற்றி கவலைப்படமாட்டார்கள். அவர்கள் புதுமையாகவும், தலைவராகவும் இருக்க விரும்புவார்கள். அவர்களின் தலைமை பண்பு உடன் இருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

ரிஷபம்
இவர்கள் சிறந்த அறிவுரையாளராக இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் பணிவானவராக இருப்பார்கள். அவர்களின் சிறந்த குணங்கள் வலிமை, நம்பகத்தன்மை, கடின உழைப்பு மற்றும் பொறுமை ஆகும். ரிஷப ராசிக்காரர்கள் இனிமையாக பழக்கூடியவரகள் எனவே அவர்களை சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம் இருக்கும். மேலும் வாழ்க்கை மீதான இவர்களின் அணுமுறையே வித்தியாசமானதாக இருக்கும். இவர்கள் சிறந்த அறிவுரைகளை வழங்குவார்கள் அதே சமயம் மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக கவனிப்பார்கள். உடனிருப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டார்கள்.

மிதுனம்
இவர்கள் அதிகம் பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வேடிக்கையான, நம்பிக்கையான, ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் அதேசமயம் தான் பெற்ற ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஏனெனில் இவர்கள் புதிய நபர்களை சந்திக்க விரும்புவார்கள், அதோடு அவர்களுடன் எளிதில் பழகியும் விடுவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தன் இதயத்திலிருந்து பேசுபவர்கள், இதுவே இவர்களை நேர்மையனவராகவும், அன்பானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாற்றியுள்ளது. உங்களுக்கு கடக ராசி நண்பர்கள் யாராவது இருப்பின் நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. அவர்களே உங்களுக்காக கவலைப்படுவதோடு உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பார்கள். இவர்கள் இயற்கையை நேசிப்பவராக இருப்பார்கள். நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் உதவுபவராக இருப்பார்கள்.

சிம்மம்
காட்டு ராஜாவின் குறியீடை கொண்ட சிம்ம ராசிக்காரர்களின் இதயம் மென்மையானதாக இருக்கும். நம்பிக்கை, நேர்மை, ஊக்குவிக்கும் பண்பு, குறிக்கோள் போன்றவை இவர்களின் சிறந்த குணங்களாக இருக்கும். அவரிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்கு நேர்மையானவராக இருப்பதுடன் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களை பாராட்டுவதுடன் அவர்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள்.

கன்னி
இவர்களுக்கு சந்தேக குணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதுவே அவர்களை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். அதேபோல எந்த முடிவையும் உடனே ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனை அலசி ஆராய்ந்து அதன் பின்னரே அதனை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை கூறுகிறார்கள் என்றால் அது உண்மையாகத்தான் இருக்கும், ஏனெனில் அதனை பற்றி அவர்கள் அவ்வளவு தெரிந்துவைத்திருப்பார்கள்.

துலாம்
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென நினைப்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். அவர்கள் அமைதியான நல்ல உள்ளம் படைத்தவராக இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அதற்கான சூழ்நிலைகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாவே ராஜதந்திரியான இவர்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகி நட்பை உருவாக்கி கொள்வார்கள். உயர்ந்த இலட்சியங்களையும், வித்தியாசமான அதேசமயம் தனித்துவமான சுவைமிக்க விஷயங்களை தேர்ந்தேடுப்பதில் வல்லவராக இருப்பார்கள். அனைவரையும் அரவணைத்து அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் போராடக்கூடியவராக இருப்பார்கள்.

விருச்சிகம்
இவர்கள் நல்ல கவனிக்கும் திறன் உள்ளவராக இருப்பார்கள். இவர்களின் உள்ளுணர்வை கொண்டே ஒரு இடத்தின் சூழ்நிலையையும், அங்கு நடக்கும் பிரச்சினையையும் கண்டறிந்து விடுவாரக்ள். இவர்கள் எந்த ஒரு செயலையும் கச்சிதமாக செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அவர்களின் திறமை கொண்டு எந்த வேலையாய் இருந்தாலும் அதனை எளிதாக்கி விடுவார்கள். மற்றவர்கள் பற்றிய இவர்களின் கணிப்புகள் எப்பொழுதும் சரியாக இருக்கும்.

தனுசு
எப்பொழுதும் சாகசங்களையும், புதிய அனுபவங்களையும் விரும்புவராக இருப்பார்கள். தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார்கள். அதேபோல மற்றவர்களின் சுதந்திரத்திலும் தலையிடமாட்டார்கள். அவர்களின் ஆர்வம் அவர்களை புதியவற்றை நோக்கி பயணிக்க தூண்டிக்கொண்டே இருக்கும். அவர்களின் கற்பனைத்திறன் அளவற்றது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகளான மகர ராசிக்காரர்கள் வைராக்கியம் அதிகம் உள்ளவராக இருப்பார்கள் அதேசமயம் தங்கள் துறையில் தலைமையிடத்திலும் இருப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தோல்வி ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டாரக்ள். அந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இலட்சியம் மிக்கவர்கள் அதே சமயம் பொறுமையானவர்கள், தங்களின் குறிக்கோளை நேர்மையான முறையில் வெல்வார்கள். தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உண்மையானவராக இருப்பார்கள்.

கும்பம்
ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய கூடியவராக இருப்பார்கள். ஏதேனும் புதியவற்றை அவர்களுக்கு அறிமுகபடுத்தினால் உடனடியாக அதனை முயற்சி செய்து பார்ப்பார்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றமாரி உடனடியாக மாறிக்கொள்வார்கள். மற்றவரகளின் தனிப்பட்ட விருப்பங்களில் நுழைவதை விரும்பமாட்டார்கள் அதேபோல தன் தனிப்பட்ட விருப்பங்களிலும் மற்றவர்களின் தலையீடை விரும்பமாட்டார்கள்.

மீனம்
எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள், மற்றவர்களின் சந்தோஷத்திலும், துன்பத்திலும் பங்குகொள்ள வேண்டுமென விரும்புவார்கள். அவர்களின் நண்பர்கள் சோகமாய் இருந்தால் அவர்களும் சோகமாய் இருப்பார்கள், அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் மிகுந்த இரக்க குணம் உடையவராக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களின் ஆசைகளை தன் ஆசையாக நினைத்து நிறைவேற்ற துடிப்பார்கள். அவர்களின் கற்பனை திறன் எப்போதும் நல்ல முடிவுகளையே தரும். – Source: boldsky

Related posts

மரணமடைந்த 116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண்

nathan

திருமணத்திற்கு பிறகு உங்களை கோடீஸ்வரனாக்கும் ராசி இதுதான்!

nathan

இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.. மிரண்டுபோன போலீஸ்

nathan

குழந்தைக்கு பெயர் சூட்டிய கேரள திருநங்கை தம்பதி -மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

nathan

ராகு கேது பெயர்ச்சி..பலன்களை பெறப்போகும் ராசி

nathan

முடியை கருப்பாக மாற்ற ஏழு நாட்கள் போதும்

nathan

சுந்தர் பிச்சை சென்னையில் வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கியதும் இடித்து தரைமட்டமாக்கிய தமிழ் நடிகர்

nathan

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ப்ரியா பவானி சங்கர்

nathan

பிளாஸ்டிக் பேட் வியாபாரம் செய்யும் விஜயகாந்த் தம்பி!

nathan